Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தனக்கு தொடர்ந்து வெற்றி கிடைக்கிறது என்ற மெதப்பில் கோபி ஓவராக ஆட்டம் போட்டார். அதிலும் இனியா மற்றும் செழியன் நம் கைக்குள் இருக்கிறாங்க எழிலும் தன்னுடைய கண்ட்ரோலுக்கு வந்துவிட்டார் என்ற நினைப்பில் பாக்கியாவை துன்பப்படுத்தலாம் என ஒரு கணக்கு போட்டு வைத்தார்.
அதன்படி பாக்யாவின் ஹோட்டலுக்கும் ஆனந்தை அனுப்பி செய்கிற சாப்பாடுகளில் கலப்படத்தை செய்ய வைத்து பொதுமக்களிடம் கெட்ட பெயரை வாங்குவதற்கு பிளான் பண்ணி இருந்தார். ஆனால் தற்போது அனைத்தும் தவிடு பொடியாக்கும் விதமாக பாக்கியா உஷாரா ஆகிவிட்டார்.
அதாவது எழில் எப்பொழுதுமே அம்மா பிள்ளை தான் என்று சொல்வதற்கு ஏற்ப அம்மாவை பட பூஜைக்கு வர வேண்டாம் என்று சொல்லி இருந்தாலும் அம்மா பற்றிய கதையையும் கஷ்டங்களையும் படமாக்கி வெற்றியை காட்டுவேன் என்பதற்கு ஏற்ப பாக்கியலட்சுமி என வைத்து படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார்.
இதுவே கோபிக்கு அதிர்ச்சியாகி பெரிய இடியாக விழுந்து விட்டது. இதனை அடுத்து கோபி இன்னொரு பிளானிலும் தோற்றுப் போய்விட்டார். அதாவது பாக்யா மக்களிடம் இழந்த பெயரை மீட்டெடுக்கும் விதமாக சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு செய்த இனிப்பு பலகாரத்தில் பல ஆபர்களை வைத்து டெலிவரி பண்ண ஆரம்பித்தார்.
இதுலயும் கெட்ட பேர் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக பாக்கியா ஹோட்டலில் வேலை பார்க்கும் ஆனந்துக்கு கோபி போன் பண்ணுகிறார். இதை அங்கு இருப்பவர்கள் பார்த்ததோடு மட்டுமில்லாமல் பாக்யாவும் பார்த்து அந்த போனை அட்டென்ட் பண்ணி ஸ்பீக்கரில் போட்டு விட்டார். அங்கே ஈஸ்வரியும் வந்திருப்பதால் கோபி என்ன சொல்கிறார் என்பதை கேட்கும்படி ஆகிவிட்டது.
அதாவது கோபி, ஆனந்த இடம் எப்படி பிரியாணியில் கெட்டுப்போன சிக்கனை போட்டு பாக்யாவுக்கு பிரச்சினை பண்ணினமோ, அதே மாதிரி இப்பொழுதும் ஏதாவது பண்ணி பாக்கியா ஹோட்டலை நிரந்தரமாக சீல் வைக்கும் விதமாக பண்ண வேண்டும் என்று கோபி, ஆனந்த இடம் சொல்கிறார்.
இதை அங்கு இருப்பவர்கள் அனைவரும் கேட்டு விட்டார்கள். அத்துடன் ஈஸ்வரியும் கோபி இந்த மாதிரி மட்டமான வேலையை செய்திருக்கிறான் என்று அதிர்ச்சியாகி விட்டார். உடனே பாக்யா, கோபி வீட்டிற்கு போய்விட்டார். அங்கே போனதும் ராதிகா, பாக்யாவிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.
அதற்கு பாக்யா கோபத்துடன் என்னை பழி வாங்குவதாக நினைத்து பிரியாணியில் கெட்டுப் போன கறியை கலக்க சொல்லி இருக்கிறார் என்று ராதிகாவிடம் சொல்லி கோபியை நான் உங்களை சும்மா விடமாட்டேன் கோபிநாத் என்று சவால் விடும் அளவிற்கு வீரவசனமாக பேச ஆரம்பித்து விட்டார்.
ஆனால் உண்மையிலேயே சொன்னபடி இந்த பிரச்சினையை அப்படியே விட்டு விடாமல் அதற்கான ஆதாரம் ஆனந்த் என்பதால் அவர் மூலம் போலீசில் புகார் கொடுத்து கோர்ட்டுக்கு கோபியை கூட்டிட்டு போகும் படி பாக்கியா அதிரடியான விஷயங்களை செய்ய வேண்டும். இந்த விவாகரங்கள் எல்லாம் வெளிவந்த பிறகு கோபியின் பசங்களும் அப்பாவை வெறுக்கும் படியான சூழ்நிலை வரப்போகிறது.
அத்துடன் இவ்வளவு மட்டமான வேலையை செய்த கோபியை ராதிகா தெரிந்து கொண்டதால் இனி கோபியிடம் மொத்த கோபத்தையும் காட்டும் விதமாக வெறுப்பை காட்டப் போகிறார். பாக்கியாவை எல்லாரும் வெறுத்து தனி மரமாக நிறுத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோபிக்கு கடைசியில் கிடைத்தது ஏமாற்றம்தான். அத்துடன் கோபி தான் யாருமே இல்லாமல் நடுரோட்டியில் நிற்கும்படி நிலைமை வரப்போகிறது.