Brinda Das: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் சீரியலில் எப்போதுமே ஆனந்தம் சீரியலுக்கு இடம் உண்டு. இந்த சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்தவர் தான் பிருந்தா தாஸ்.
இப்போதைய சீரியல் கலாச்சாரத்தை பொருத்தவரைக்கும் வில்லி என்றால் கலர் கலரான பட்டுப் புடவை, உடம்பு முழுக்க தங்க நகைகள் என்று இருப்பார்கள்.
அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் அத்தனை பேரையும் எதிர்த்து பேசுவது, முரண்டு பிடிப்பது போன்ற கேரக்டராக இருக்கும். ஆனால் அபிராமி கேரக்டரில் நடித்த பிருந்தா தாஸ் அப்படி இல்லை.
ஆனந்தம் சீரியல் அபிராமியை நினைவிருக்கா?
சிம்பிளான காட்டன் புடவை, மாமனார் மாமியாருக்கு அடங்கி நடக்கும் மருமகள் என மிரட்டிய வில்லி. சீரியலில் அபிராமி தான் வில்லி என்று தெரியவரும் காட்சி எல்லாம் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.
இவருடைய முகத்தை பார்த்தாலே அபிராமி என்று 90 கிட்ஸ் தான் நினைவில் கொண்டுவரும் அளவுக்கு அந்த கேரக்டரில் வாழ்ந்து இருந்தார்.
தற்போது அவருடைய மகன் பிரபல ஹீரோவாக இருக்கிறார். முதல் நீ முடிவும் நீ படத்தில் நடித்த கிஷன் தாஸ் தான் பிருந்தா தாசின் மகன்.
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கிஷன் தாஸ் நடித்த தருணம் படம் ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
![Brinda Das](https://www.cinemapettai.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-10-101848-1024x669.png)