சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

சிங்கப்பெண்ணில் காதலுக்காக வேலுவிடம் தஞ்சம் அடையும் அன்பு-ஆனந்தி.. பூனைக்கு மணி கட்டிய தில்லைநாதன்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி மகேஷிடம் அன்புவை காதலிப்பதாக சொல்வது போல் காட்டப்பட்டது.

இதனால் மகேஷ் கோபமாகி அன்புவை கம்பெனியை விட்டு வெளியே அனுப்புவது போலவும் சீரியலுக்கு அதீத எதிர்பார்ப்பு கிளப்பப்பட்டது.

இது மொத்தமும் ஆனந்தியின் கனவு என்று சொல்லி இயக்குனர் பெரிய பல்பாக கொடுத்துவிட்டார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் யாருமே எதிர்பார்க்காத விஷயம் நடந்திருக்கிறது.

வேலுவிடம் தஞ்சம் அடையும் அன்பு-ஆனந்தி

ஆனந்தி கடைசியாக தன் காதலை சேர்த்து வைக்க அண்ணன் வேலுவிடம் தஞ்சம் அடைகிறாள். முதலில் ஆனந்தியை பார்த்த வேலுவின் மனைவிக்கு கோபம் வருகிறது.

பின்னர் அமைதியாக போய்விடுகிறார். ஆனந்தி அண்ணனிடம் காதலை சொல்வது போலவும் அவன் ரொம்பவே யோசிப்பது போலவும் காட்டப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் மகேஷிடம் அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பதை யார் தான் சொல்லப் போகிறார்கள் என்று பெரிய சந்தேகம் இருந்து வந்தது.

கடைசியாக இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்தது தில்லைநாதன் தான். வார்டன் மகேஷின் அப்பா தில்லைநாதனிடம் அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பதை சொல்லி விடுகிறார்.

இந்த விஷயத்தை மகேஷிடம் தில்லைநாதன் சொல்வது போலவும் மகேஷ் பெரிய அளவில் அதிர்ச்சி அடைவது போலவும் காட்டப்பட்டிருக்கிறது.

தில்லைநாதன் மகேஷிடம் உண்மையை சொல்வது ஆவது ரியலா இல்லை மறுபடியும் கனவா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News