புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்க பெண்ணில் மகேஷ் முன்னாடியே டூயட் பாடும் ஆனந்தி, அன்பு.. செவரக்கோட்டையில் நடக்க போகும் விபரீதம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் மீண்டும் முக்கோண காதல் கதை களத்திற்கு திரும்பி விட்டது. அன்பு மற்றும் ஆனந்தி குடோனுக்குள் மாட்டிக் கொண்டது, மித்ரா மற்றும் கருணாகரனை ஆனந்தி வெளுத்து கட்டியது என இந்த வாரம் முழுக்க இந்த சீரியல் அமர்க்களமாக போனது.

அடுத்தடுத்து ஆனந்தி கம்பெனியில் சிங்கப்பெண்ணாக மாறி என்னவெல்லாம் செய்யப் போகிறார் என எல்லோருக்குமே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மொத்த சிங்கப்பெண் கூட்டமும் இப்போது கிராமத்து கதைக்கு ஷிப்ட் ஆகி இருக்கிறார்கள்.

ஆனந்தி ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு கம்பெனி நண்பர்கள், ஹாஸ்டல் தோழிகள், வார்டன் என மொத்தமாக எல்லோரும் கிளம்பி விட்டார்கள். கடைசியில் வேண்டாத விருந்தாளியாக மித்ராவும் வண்டியில் வந்து சேர்ந்திருக்கிறாள்.

அன்புடன் கைகோர்த்த மகேஷ்

முதலில் ஆனந்திக்கு கருணாகரன் லீவு கொடுப்பதாய் இல்லை. ஆனந்தியின் அப்பா அழகப்பன், மகேஷுக்கு போன் பண்ணி திருவிழாவுக்கு வரும்படி அழைத்ததும் மகேஷ், அன்புவை தன்னுடன் வரும்படி அழைக்கிறான்.

வார்டனின் ஃப்ளாஷ்பேக்

அன்பு கிளம்பியதும் முத்து, சௌந்தர்யா, ஜெயந்தி என மொத்த டிக்கெட்டுகளும் கிளம்பிவிட்டன. ஏற்கனவே ஹாஸ்டலில் ஆனந்தியின் தோழிகள் திருவிழாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்கள். ஆனந்தியுடன் மகேஷ் வருவது தெரிந்ததும், வார்டனும் திருவிழாவுக்கு வருகிறேன் என கிளம்பி இருப்பது நேயர்களுக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது.

வார்டனின் பின்னணியில் பெரிய அளவில் ஏதோ ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. மகேஷ் ஆனந்தியின் அப்பா திருவிழாவுக்கு கூப்பிட்டதால் ஊருக்கு போவதை விட, ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் திருமணத்தைப் பற்றி பேச தான் பெரிய திட்டம் போட்டுப் போகிறான்.

மகேஷ், ஆனந்தியின் அப்பா அம்மாவுடன் திருமணத்தைப் பற்றி பேசி விடக்கூடாது என்று மித்ரா அவனுடனே ஒட்டிக்கொண்டு போகிறாள். ஊருக்கு போனதும் ஒரு வேலை மகேஷை, கண்டு கொள்ளாமல் ஆனந்தி அன்புவிடம் நெருக்கம் காட்டினாள் கண்டிப்பாக அது பெரிய அளவில் பிரச்சனையை கிளப்பும்.

அன்பு ஆனந்திக்கு காத்திருக்கும் சிக்கல்

அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே ஊரில் ஒரு வில்லன் ஆனந்தியை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறான். மொத்த கூட்டமும் செவரக்கோட்டைக்கு செல்வது மட்டுமல்லாமல் ஆனந்தியின் அண்ணன் தான் அந்த வண்டியை ஓட்டும் டிரைவராக போகப் போகிறான்.

இப்படி மொத்த பேரும் ஒன்று கூடும் இடத்தில் ஆனந்தி மற்றும் அன்புவுக்கு சூழ்நிலை சாதகமாக இருக்குமா, அல்லது ஏதாவது பிரச்சனை ஏற்படுமா என இனி தான் தெரியும். மேலும் ஊரில் ஆனந்தியை பழிவாங்க காத்திருக்கும் வில்லனை கண்டிப்பாக அன்பு மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து ஒழித்து கட்டுவார்கள் என்பது நன்றாக தெரிகிறது.

இன்று வெளியாகியிருக்கும் புரோமோவில் வண்டியில் எல்லோரும் சந்தோஷமாக பேசி செல்வது போல் காட்டப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஆனந்தி மற்றும் அன்பு சந்தோஷமாக டூயட் பாடுவது போலவும் காட்டப்பட்டிருக்கிறது. அன்பு சந்தோஷமாக இருந்தால் சிங்க பெண்ணே சீரியல் இன்று ரசிகர்களுக்கு டபுள் குஷி தான்.

Trending News