வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

சிங்கப்பெண்ணில் மொத்தமாய் முடிச்சிவிடப் போகும் ஆனந்தி.. மகேஷ் குழந்தைக்கு இனிஷியல் போட தயாராகும் அன்பு!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஆனந்திக்கு உதவி செய்ய அன்பு முயற்சிக்கும்போதெல்லாம் அவனுக்கு பெரிய ஆபத்து தான் நடக்கிறது.

இருந்தாலும் ஆனந்தியின் மீது இருக்கும் அதீத காதலால் அன்பு எல்லாவிதமான ரிஸ்கையும் அசால்ட்டாக செய்து விடுகிறான். மகேஷின் வார்த்தைக்காகவும், ஆனந்தியின் பாதுகாப்பிற்காகவும் ஆனந்தியை தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருக்கும் அன்பு அது அவனுடைய அம்மா மற்றும் தங்கச்சிக்கு தெரியாமல் இருக்க படாத பாடு பட்டு வரும் எபிசோடுகள் ரசிகர்கள் அதிகம் வரவேற்பதாக அமைந்திருக்கிறது.

அம்மாவை எப்படி சமாளிக்க போகிறான், ஆனந்தி அடுத்து எங்கே தங்கப் போகிறாள் என்பதுதான் தற்போது பெரிய எதிர்பார்ப்பாக மாறி இருக்கிறது. காயத்ரிக்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லி ஆனந்தி மீண்டும் ஹாஸ்டலுக்கு போவது போல் தான் இந்த வாரம் எபிசோடு அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது.

மகேஷ் குழந்தைக்கு இனிஷியல் போட தயாராகும் அன்பு!

இதற்கிடையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அன்புவின் அம்மாவிடம் மாட்டிக் கொள்வது போல் காட்டப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இது மட்டும் நடந்து விட்டால் அன்பு மற்றும் ஆனந்தி இருவரது நிலைமையும் ரொம்ப மோசமாகிவிடும்.

மகேஷ் வந்து நேரில் பேசினால் மட்டும்தான் அன்புவின் அம்மா சமாதானம் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து அன்பு மீண்டும் கம்பெனியில் சேர்வது போல் தான் காட்டப்பட இருக்கிறது.

தற்போது அன்பு, ஆனந்தியை தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருப்பதால் எதிர்காலத்தில் அவனுக்கு இன்னும் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது மகேஷ் மூலமாக ஆனந்தி கர்ப்பமாக இருப்பது போல் அவ்வப்போது இயக்குனர் ஹிண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அன்பு வீட்டில் தங்கிய பிறகு ஆனந்தி கர்ப்பமாக இருப்பது மகேஷுக்கு தெரிந்தால் கண்டிப்பாக இதற்கு காரணம் அன்பு தான் என்று நம்பி விடுவான். மித்ராவும் இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்வாள்.

இதிலிருந்து அன்பு எப்படி மீள்வான் என்பதும் பெரிய சந்தேகம்தான். ஒருவேளை அடுத்து ஆனந்தி கர்ப்பமாக இருப்பது போல் கூட இந்த சீரியலை நகர்த்த அதிக வாய்ப்பு இருப்பதால் ஆனந்திக்காக அந்த குழந்தையையும் தன்னுடையது என்று ஏற்றுக்கொள்ள அன்பு துணியவும் வாய்ப்பிருக்கிறது. அடுத்து எப்படி இந்த கதை நகர இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News