Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் பெரிய பெரிய திருப்பங்கள் எல்லாம் நிறைந்து இருக்கிறது. மலைக்கோவிலில் வந்து என்னை கல்யாணம் பண்ணா விட்டால் நான் இறந்து விடுவேன் என நந்தா எழுதிய மிரட்டல் கடிதத்தால் ஆனந்தி ரொம்பவே நொந்து போய் இருக்கிறாள்.
ஆனந்தி எந்த மாதிரியான ஒரு முடிவை எடுக்கப் போகிறாள் என்பது சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களின் இந்த வார எதிர்பார்ப்பாக இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆனந்தி நேற்றைய எபிசோடில் நந்தா வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு மலைக்கோவிலுக்கு செல்ல புறப்பட்டு விட்டாள்.
அதே நேரத்தில் மகேஷ் தன்னுடைய அப்பா அம்மாவிடம் ஆனந்தியை அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு ஓகே வாங்க காத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் ஆனந்தியை கூட்டி வருகிறேன் என்று சொன்ன மித்ரா வெறும் கையோடு வர, மகேஷ் ஆனந்தி எங்கே என ஏமாற்றத்துடன் கேட்கிறான்.
அதற்கு மித்ரா ஆனந்தி வேறொருவரை காதலிக்கிறாள், அந்தப் பையனை திருமணம் செய்து கொள்ள இன்று கிளம்பிப் போய் இருக்கிறாள் என்ற பெரிய அதிர்ச்சி செய்தியை சொல்கிறாள். அதே நேரத்தில் கம்பெனியில் நந்தாவின் உண்மையான அட்ரஸை கண்டுபிடித்து அன்புவிடம் கொடுக்கிறார்கள்.
அன்பு அந்த அட்ரஸில் போய் பார்க்கும் பொழுது நந்தாவின் வீடு பூட்டு போடப்பட்டிருக்கிறது. பூட்டை உடைத்து விட்டு வீட்டிற்குள் சென்று அன்பு பார்க்கும் பொழுது, அங்கு ஒரு சுவரில் நந்தா இதுவரை தான் ஏமாற்றிய பெண்களின் புகைப்படத்தை ஒட்டி வைத்திருக்கிறான்.
அந்த புகைப்படத்துடன் ஆனந்தியின் புகைப்படம் இருக்கிறது. இப்படி நேற்றைய எபிசோடு முடிந்திருக்கும் நிலையில், இன்றைய புரோமோவில் மாலையும் கழுத்துமாக ஆனந்தியும் நந்தாவும் அமர்ந்திருக்க, அன்பு அந்த மலைக்கோவிலுக்கு வந்து விடுகிறான். சரியாக நந்தா ஆனந்தி கழுத்தில் தாலி கட்டும் வேளையில், அன்பு அந்த திருமணத்தை நிறுத்துவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்
- வந்த வேலையை முடித்துவிட்டு எஸ்கேப் ஆன நந்தா
- நந்தாவின் முகத்திரையை கிழிக்க அன்புக்கு கிடைத்த துருப்பு சீட்டு
- ஆனந்தியை லாக் பண்ண நந்தா போடும் பிளான்