சிங்கப்பெண்ணில் கர்ப்பமானது தெரிந்து அன்புவை விட்டு விலகும் ஆனந்தி.. காதலுக்கும், கற்பிற்கும் நடுவே நடக்க இருக்கும் போராட்டம்!

Singapenne (1)
Singapenne (1)

Singapenne: சிங்க பெண்ணே சீரியலில் நேயர்கள் எதிர்பார்க்காத திருப்பம் நடந்திருக்கிறது. அன்பு ஆனந்தி சேர வேண்டும் என்பதுதான் சீரியல் பார்ப்பவர்களில் 90% பேர் ஆசைப்படுவது.

மேலும் மகேஷை வில்லனாக காட்டாமல் அவனுக்கு இன்னொரு ஜோடி வர வேண்டும் என்பதும் கோரிக்கை தான். ஆனால் இதை எல்லாம் தாண்டி இயக்குனர் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறார்.

இவ்வளவு நாள் ஆனந்தி ஒரு வேளை கர்ப்பமாக இருப்பாளோ என்ற சந்தேகத்தை கிளப்பி இருந்தார். இந்த நிலையில் நேற்று வெளியாகியிருக்கும் புரோமோவில் டாக்டர் ஆனந்தியிடம் அவளுடைய கர்ப்பத்தை உறுதி செய்வது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

அன்புவை விட்டு விலகும் ஆனந்தி

இதனால் கோபத்தில் ஆனந்தி மருத்துவமனையை விட்டு கிளம்பி நேரடியாக கோவிலுக்கு செல்கிறாள். கண்ணகி மதுரையை எரித்தது போல் நான் என் கற்புக்காக என்னையே எரித்துக் கொள்வேன் என்று சபதம் போடுகிறாள்.

இதை தொடர்ந்து ஆனந்தி அன்புவை விட்டு விலக அதிக வாய்ப்பு இருக்கிறது. தான் நிஜமாகவே கர்ப்பமாக இருக்கிறேனா, இந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் என ஆனந்தி அடுத்த கட்டமாக யோசிப்பது போல் கதை நகர இருக்கிறது.

என்னதான் ஆனந்தியை, அன்பு எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும் இப்படி ஒரு பழியுடன் ஆனந்தி அன்புடன் இருக்க வாய்ப்பில்லை.

இதனால் மீண்டும் ஆனந்தி மகேஷ் உடன் ஜோடி சேருவாளா அல்லது அன்புடன் ஜோடி சேருவாளா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.

Advertisement Amazon Prime Banner