Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கப் போகிறது. கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி என்பது போல் ஆனந்திக்கு எந்த பக்கம் பார்த்தாலும் பிரச்சனைக்கு மேல் பிரச்சினை தான்.
கம்பெனியில் இருக்கும் சிக்கல்கள் பத்தாது என்று சொந்த ஊரில் வில்லன் ஒருவன் ஆனந்தியின் வருகைக்காக காத்திருக்கிறான். ஏற்கனவே ஊருக்குள் வரும் ஆனந்தி மித்ரா என்ற ஒரு பிரச்சனையுடன் தான் நுழைய இருக்கிறாள்.
அது மட்டும் இல்லாமல் இந்த பயணத்தின் போது நான் தான் அழகன் என்று சொல்லப் போவதாக அன்பு ஒரு பக்கம் முடிவெடுத்து இருக்கிறான். இன்னொரு பக்கம் ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் எப்படியும் கல்யாணத்தைப் பற்றி பேசி விட வேண்டும் என்ற முடிவோடு மகேஷ் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறான்.
ஆனந்தி வாழ்க்கையில் நடக்க போகும் விபரீதம்
அது மட்டும் இல்லாமல் அன்பு மற்றும் மகேஷ் இருவருமே இந்த பயணத்தில் ஆனந்தியிடம் நெருங்கி பழக முயற்சிப்பது பிரச்சனை எப்போது பெருசாகும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கிறது.
இருக்கும் பிரச்சினை பத்தாது என்று ஊரில் இருக்கும் வில்லன் ஊரை விட்டு வெளியே போகாத அளவுக்கு பெருசாக ஏதாவது பண்ண வேண்டும் என காத்திருக்கிறான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஊருக்குள் வந்த ஆனந்தி தன்னுடைய நண்பர்களுடன் மோட்டார் செட்டுக்கு குளிக்கப் வில்லனும் அதே இடத்திற்கு வந்து ஆனந்தியிடம் வம்பு இழுப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
எப்படியும் மகேஷ் மற்றும் ஆழ்ந்த இருவருமே தங்களுடைய ஹீரோயிசத்தை காட்ட வாய்ப்பு இருக்கிறது. சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு இந்த முக்கோண காதல் கதை கான்செப்ட் பிடிக்கவில்லை என்பதை பல முறை தங்களுடைய விமர்சனங்களின் மூலம் சொல்லி வருகிறார்கள்.
இயக்குனர் புரிந்தும் கண்டன்ட் இல்லாதது போல் இந்த முக்கோண காதல் கதையை மீண்டும் கொண்டு வருகிறார். இந்த கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து அன்பு நான் தான் அழகன் என்று சொல்வது போல் வைத்தால் தான் இனி சீரியலில் விறுவிறுப்பு உண்டாகும்.
சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- அன்பு, ஆனந்தி கையில் கிடைத்த முக்கிய சாட்சி
- சிங்க பெண்ணில் கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி
- சிங்க பெண்ணில் அந்தர்பல்டி அடித்த ஆனந்தி
- சிங்க பெண்ணில் அன்புக்காக, மகேஷை எதிர்க்கும் ஆனந்தி