வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

‘கண்ண மூடுனா, நீங்க தான் தெரியுறீங்க அன்பு’.. சிங்கப்பெண்ணில் அன்புவின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்க இருக்கிறது. செவரக்கோட்டை திருவிழாவை முடித்துவிட்டு மொத்த பேரும் சென்னை திரும்பியதும் மீண்டும் முக்கோண காதல் கதை ஆரம்பித்து விட்டது.

இவ்வளவு நாள் மகேஷ் தன்னுடைய காதலை ஆனந்தியிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என ரொம்ப முயற்சி செய்து கொண்டிருந்தான். தற்போது மொத்த பொறுப்பையும் அன்புவின் கையில் கொடுத்துவிட்டு மகேஷ் ரிலாக்ஸ் ஆகிவிட்டான்.

எப்படியாவது அன்பு தன்னுடைய காதலை இடம் சொல்லி விடுவான் என மகேஷ் நினைத்துக் கொண்டிருக்கிறான். என்னதான் அன்பு ஹீரோவாக இருந்தாலும், அன்புக்குள் இருக்கும் அழகன் தன்னுடைய காதலுக்காக சுயநலவாதியாக மாறிவிட்டான்.

எப்படியாவது நான்தான் அழகன் என ஆனந்த இடம் சொல்ல வேண்டும் என துடியாக துடித்துக் கொண்டிருக்கிறான். நேற்று எபிசோடில் நேரம் கூடிவரும் வேலையில் சரியாக மகேஷ் அந்த இடத்தில் வந்து மொத்தத்தையும் கெடுத்து விட்டு விட்டான்.

அன்புவின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய ஆனந்தி

அது மட்டுமில்லாமல் ஆனந்தியை அவனே ஹாஸ்டலுக்கு கொண்டு போய் டிராப் பண்ணினான். ஹாஸ்டல் போன் வரை போன மகேஷ் வார்டனையும் நேரில் சந்தித்து பேசினான். உங்களுடன் செவரக்கோட்டையில் நான் பேசி பழகியது ஒருவித உணர்வாக இருந்தது.

உங்கள் கையால் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என சொல்கிறான். உடனே வார்டன் மகேஷுக்கு கேழ்வரகு தோசை சுட்டு சட்னி வைத்து கொடுக்கிறார். இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் மகேஷ், வார்டனிடம் நீங்கள் உங்கள் மகள் அல்லது மகன் யாரையாவது ரொம்ப மிஸ் பண்ணுறீங்களா என்று கேட்கிறான்.

வார்டன் மட்டும் தன்னுடைய வாயை திறந்து ஃப்ளாஷ்பேக் சொல்லிவிட்டால் கதை மிகப் பெரிய திருப்பம் ஏற்படும். அதே நேரத்தில் மகேஷ் ஹாஸ்டலுக்கு வந்தது மித்ராவுக்கு பயங்கர கோபம் வருகிறது. மகேஷ் வந்ததை கூட பார்க்காமல் நீங்க என்ன பண்ணுறீங்க என தோழிகளிடம் டென்ஷன் ஆக பேசுகிறாள்.

மேலும் இன்றைய ப்ரோமோவில் வழக்கம் போல இரவு நேரத்தில் அன்பு, ஆனந்த இடம் போன் பேசுவது போல் காட்டப்படுகிறது. அன்பு நான் தான் அழகன் என சொல்ல முயற்சி செய்வது நன்றாகவே தெரிகிறது. நீங்க கண்ண மூடுனா உங்களுக்கு யாருடைய முகம் முதலில் தெரிகிறது என அன்பு கேட்கிறான்.

அதற்கு ஆனந்தி கண்ண மூடுனா உங்க முகம் தான் தெரியுது அன்பு என சொல்கிறாள். அத்தோடு இன்றைய ப்ரோமோ முடிந்து இருக்கிறது. இதிலிருந்து ஆனந்தி அன்புவை தனக்கே தெரியாமல் நேசிக்க தொடங்கி விட்டாள் என்பது நன்றாக தெரிகிறது.

அதன் பின்னர் அன்பு நான் தான் அழகன் என்று சொன்னால் கண்டிப்பாக ஆனந்தி ஏற்றுக் கொள்வாள். ஆனால் அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது வெளியில் தெரிந்தால் அதைத் தொடர்ந்து சிங்க பெண்ணே சீரியலில் பல பிரச்சனைகள் எதிர் வர வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News