புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்க பெண்ணில் உறுதியான ஆனந்தியின் கர்ப்பம்.. அடுத்தடுத்து நடக்க இருக்கும் விபரீதங்கள்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் முழுக்க ரசிகர்கள் கண்களுக்கு கிராமத்து விருந்து தான். ஆனந்தி ஊரில் நடக்க இருக்கும் தீமிதி திருவிழாவுக்கு கம்பெனி நண்பர்கள், ஹாஸ்டல் நண்பர்கள் என மொத்தமாக ஒன்று கூடி சென்றிருக்கிறார்கள்.

வம்பை விலைக்கு வாங்க மித்ராவையும் கையோடு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சொந்த ஊருக்கு திரும்பிய ஆனந்திக்கு அவளுடைய தம்பி மற்றும் தங்கச்சி பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள். இதை பார்த்த ஆனந்தியின் அண்ணனுக்கு கண்கள் கலங்கி விட்டது.

ஸ்கோர் செய்யும் மகேஷ்

வீட்டில் யாரும் பார்ப்பதற்கு முன்னாடி வண்டியை எடுத்துக்கொண்டு அவளுடைய அண்ணன் கிளம்பி விட்டான். வீட்டிற்குள் வந்த ஆனந்தியின் நண்பர்கள் வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மகேஷ் தன்னால் முடிந்த அளவு ஆனந்தியின் அப்பாவிடம் ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறான்.

மித்ராவுக்கு ஆனந்தியின் வீட்டுக்கு வந்ததே பிடிக்கவில்லை. வீடு சின்னதாக இருக்கிறது, குளிக்க இடமில்லை என எக்கச்சக்க புகார்கள். அதற்கு ஆனந்தியின் அப்பா பக்கத்து வீட்டுக்காரர்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள்.

மித்ராவின் அட்ராசிட்டிஸ்

அவர்களுடைய வீட்டை தான் நீங்கள் தங்க ரெடி பண்ணி இருக்கிறோம் எதற்கும் பயப்பட வேண்டாம் என்று சொல்கிறார். பின்னர் எல்லோரும் ஒன்றாக தோட்டத்திற்கு குளிக்க செல்கிறார்கள். கிராமத்துக்கு வந்ததில் இருந்தே மகேஷ் ஆனந்தி கிட்ட கொஞ்சம் ஓவர் நெருக்கம் காட்டுகிறான்.

அன்புக்கு மகேஷ் மற்றும் ஆனந்தி மீது இருக்கும் அதீத நம்பிக்கையால் எதுவுமே அவனுக்கு தவறாக தெரியவில்லை. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பம்பு செட்டில் குளிக்கிறார்கள். குளிக்க மாட்டேன் என மறுக்கும் மித்ராவையும் ஆனந்தியின் தம்பி மற்றும் தங்கச்சி தண்ணிக்குள் தள்ளிவிட்டு குளிக்க வைத்து விடுகிறார்கள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவின் குளித்துவிட்டு எல்லோரும் ஒரு தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் இளநீர் பறித்து குடிப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆனந்திக்கு அந்த இடத்தில் மயக்கம் வருகிறது.

கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி

கண்டிப்பாக இது கிராமம் என்பதால் ஊருக்குள் இருக்கும் ஏதாவது ஒரு மருத்துவச்சி கையைப் பிடித்து மருத்துவம் பார்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே அந்த மருத்துவமனையில் ஒரு நர்ஸ் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக சொல்லி இருந்தார்.

அந்த நர்ஸ் சொன்னது உண்மை என்றால் கண்டிப்பாக கிராமத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்து விடுவார்கள். இதை அவளுடைய நண்பர்களும், குடும்பத்தினரும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை.

அது மட்டும் இல்லாமல் ஆனந்தியை உயிராய் காதலிக்கும் மகேஷ் மற்றும் அன்புக்கு இது பெரிய இடியாக தலையில் விழும். மித்ராவுக்கு மட்டும் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது நன்றாகவே தெரியும்.

அடுத்தடுத்து நடக்க போகும் விபரீதங்கள்

இதனால் கண்டிப்பாக இப்படி ஒரு விஷயம் நடந்தால் அதை வெளியில் தெரியாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை மித்ரா திட்டம் போட்டு முடித்து விடுவாள். ஒரு வேலை மகேஷ்க்கு இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக அவன் ஆனந்தியை திருமணம் செய்து கொள்வான்.

இருந்தாலும் சிங்கப்பெண் சீரியல் ரசிகர்களை பொறுத்த வரைக்கும் ஆனந்தி மற்றும் அன்பு ஜோடி சேர்வது தான் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் ஆனந்தியின் கர்ப்பம், மற்றும் அந்த பார்ட்டியில் மகேஷ் ஆனந்தியிடம் தவறாக நடந்து கொண்டது போல் காட்டியது எல்லாமே எப்படி முடிய போகிறது என்பது இப்போது பெரிய சந்தேகமாக இருக்கிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News