புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்க பெண்ணில் அந்தர்பல்டி அடித்த ஆனந்தி, முட்டாள் ஆக்கப்பட்ட அன்பு.. வேலையை ஆரம்பித்த மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது. பேருக்கு மட்டும் சிங்க பெண்ணே என்ற டைட்டிலை வைத்துவிட்டு சீனுக்கு சீனுக்காக கதறி கதறி அழுவது ஏற்கனவே பார்ப்பவர்களுக்கு செம கடுப்பாக இருந்தது.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் ஹீரோயின் சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சீரியல் இது. ஆனால் இதுவரையிலும் ஆனந்தி தைரியமாக எந்த ஒரு விஷயத்தையும் செய்தது கிடையாது.

ஆனந்தி இதுவரையிலும் ஒப்பாரி வைத்து அழுத எபிசோடுகள் தான் அதிகம். மானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இப்போது பிரச்சனை நடந்திருக்கிறது. அப்பவும் பொங்கி எழாமல் அழுது கொண்டிருப்பது பார்ப்பதற்கு சகிக்கவில்லை.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இனி அன்புவை விட்டு ஒதுங்கி இருப்பது தான் நல்லது என ஆனந்தி முடிவு எடுக்கிறாள். அதுமட்டுமில்லாமல் கொதித்து போய் இருக்கும் அன்பு எப்படியாவது தன்னுடைய சதி வேலையை கண்டுபிடித்து விடுவான் என மித்ரா நினைக்கிறாள்.

அன்பு கண்டுபிடிக்காத அளவுக்கு அடுத்து ஒரு திட்டத்தை மித்ரா போடுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் மகேஷ் மீண்டும் காதல் மன்னன் ஆக மாறிவிட்டான்.

வேலையை ஆரம்பித்த மகேஷ்

இன்றைய ப்ரோமோவில் மகேஷ், ஆனந்தியிடம் தன்னுடைய காதலை தெரிவிப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது. பழையபடி இந்த வாரம் முழுக்க காதல் கதையை வைத்து ஓட்டி விடுவார்களோ என்று ரசிகர்களுக்கு பயம் தான் வந்திருக்கிறது.

Trending News