வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிங்கப்பெண்ணில், அன்புவை பற்றி உண்மையை தெரிந்து கொண்ட ஆனந்தி.. அழகனை அழிக்க திட்டம் தீட்டும் மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அன்பு வின் திடீர் இடைவெளியால் ஆனந்தி என்ன செய்வது என்று தெரியாமல் கதறிக் கொண்டிருக்கிறாள். ஆனந்தி அழுவது என்பது சீரியலில் தினமும் பார்க்கும் விஷயம் தான்.

இருந்தாலும் அன்புக்காக ஆனந்தி அழுவதுதான் இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ முறை அன்புவை காயப்படுத்தி ஆனந்திய அழ வைத்திருக்கிறாள். ஆனால் முதன்முறையாக அன்பு காயப்படுத்தியதை ஆனந்தியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மித்ராவிடம் தான் கம்பெனியை விட்டு நிற்கப் போவதாக சொல்லும் அன்பு, கார்மெண்ட்ஸ்சில் வேலை செய்யும் எல்லோரையும் அழைத்து இதைப்பற்றி சொல்ல முயற்சி செய்கிறான். அன்பு வாயை திறப்பதற்கு முன்னாடியே ஆனந்தி அந்த இடத்திற்கு வந்து அன்பு கம்பெனியிலிருந்து வேலையை விட்டு போகப் போகிறான் என சொல்கிறாள்.

அழகனை அழிக்க திட்டம் தீட்டும் மகேஷ்

கண்டிப்பாக முத்து மற்றும் ஆனந்தியின் அன்பை தாண்டி, அன்பு தன்னிச்சையாக முடிவு எடுத்து கம்பெனியை விட்டு விலகுவதற்கு வாய்ப்பே இல்லை. அன்பு ஏற்கனவே குழப்பமான மனநிலையில் இருக்கும் பொழுது மகேஷ் அவனை சந்தித்து பேசுகிறான்.

ஆனந்தியின் மனதில் முழுக்க முழுக்க அழகன் இருப்பது தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பாக அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஆனந்தியின் மனதில் இருந்து எப்படியாவது அழகனை முழுவதும் நீக்குவதற்கு நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என மகேஷ் அன்பு விடம் கேட்கிறான்.

ஏற்கனவே அன்பு ஆனந்தி விஷயத்தில் குழம்பி போய் இருக்கிறான். இதில் மகேஷின் இந்த எண்ணம் அன்பு வை ரொம்பவே குழப்பி விடுகிறது. அன்பு, அழகன் யார் என்று சொல்வான் என்பதை தாண்டி தற்போது ஆனந்திக்கு அன்பு தன்னிடம் பேசாமல் இருப்பது தான் பெரிய கஷ்டமான விஷயமாக இருக்கிறது.

இதனால் ஆனந்தி அழகனையே மறந்து அன்புவிடம் தன் காதலை தெரியப்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் நடக்கிறதா, இல்லை அன்பு கம்பெனியை விட்டு வெளியே போகப் போகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News