புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் அன்பு, மகேஷ் உடன் செவரக்கோட்டைக்கு போகும் ஆனந்தி.. மித்ராவின் அடுத்தகட்ட ஆட்டம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே அடுத்த வாரம் எபிசோடு காண பரபரப்பான அடித்தளம் இந்த வாரமே போடப்பட்டு விட்டது. இந்த வாரம் முழுக்க அன்பு மற்றும் ஆனந்தி திட்டமெல்லாம் அவர்கள் நினைத்தவரே நடந்து முடிந்திருக்கிறது.

போன வாரம் முழுக்க இருவரும் குடோனில் மாட்டிக்கொண்டது, அதன் பின்னர் கருணாகரன் மற்றும் அரவிந்த் இருவரும் இணைந்து அவர்களை காயப்படுத்தியது என பார்ப்பதற்கே கஷ்டமாக இருந்தது. இந்த வாரம் அதற்கு பழி தீர்க்கும் விதமாக ஆனந்த மித்ரா மற்றும் கருணாகரன் இருவரையும் லிப்டுக்குள் சிக்கவைத்து கதற வைத்து விட்டாள்.

போதாத குறைக்கு நேற்றைய எபிசோடில் கருணாகரனின் வண்டியை பஞ்சர் பண்ணிய ஆனந்தி, கருணாகரனை நடுரோட்டில் நிற்க வைத்து மிரட்டிய விதம் ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றது. ஆனந்தியின் சொந்த ஊரில் நடக்க இருக்கும் தீமிதி திருவிழாவுக்கு அவளுடைய அப்பா அழகப்பன் ஆனந்தியை கூப்பிட்டது மட்டுமில்லாமல் மகேசுக்கும் போன் பண்ணி கூப்பிட்டு இருந்தார்.

அதிரடி காட்டிய மகேஷ்

இது தெரியாமல் திருவிழாவுக்கு போக லீவ் கேட்ட ஆனந்திக்கு கருணாகரன் லீவு கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இதனால் டென்ஷனான அன்பு நாங்கள் மகேஷ் சாரிடம் லீவ் கேட்டுக்கொள்கிறோம் என சொல்லி விடுகிறான்.

அது பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே சரியாக அந்த இடத்திற்கு மகேஷ் வந்துவிடுகிறான். ஆனந்தியிடம் அப்பா அழகப்பன் போன் பண்ணியது பற்றியும், ஆனந்தியின் வேண்டுதல் பற்றியும் கேட்கிறான். உடனே ஆனந்தி தன்னுடைய வேண்டுதலைப் பற்றி மகேஷிடம் சொல்கிறாள்.

இதை சரியான நேரமாக உபயோகப்படுத்த நினைத்த அன்பு கருணாகரன் ஆனந்திக்கு லீவு கொடுக்க மாட்டேன் என்று சொன்னதை பற்றி சொல்கிறான். உடனே மகேஷ் லீவு மற்றும் பர்மிஷன் கொடுப்பதற்கான அத்தாரிட்டி உன்னிடம் தானே கொடுத்திருக்கிறேன் நீயே அதை பார்த்துக் கொள் என்று கருணாகரன் முன்னிலையில் சொல்கிறான்.

கடுப்பான கருணாகரன்

மகேஷின் இந்த பேச்சு கருணாகரனுக்கு இன்னும் அதிக கோபத்தை கொடுக்கிறது. மகேஷ் மித்ராவிடம் ஆனந்தியின் ஊருக்கு தான் போக இருப்பதை பற்றியும் சொல்லி விடுகிறான். இதனால் மித்ராவும் பயங்கர டென்ஷன் ஆக இருக்கிறாள்.

இன்றைய ப்ரோமோ

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சிவரக்கோட்டை திருவிழாவுக்கு ஆனந்தி மட்டுமில்லாமல் அன்பு, மகேஷ், சௌந்தர்யா, முத்து, ஜெயந்தி ஆகியோரும் வேன் பிடித்து போவது போல் காட்டப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஆனந்தியை பழிவாங்க அங்கே ஒரு வில்லனும் காத்திருக்கிறான்.

ஆனந்தியின் கம்பெனி நண்பர்கள், ஹாஸ்டல் தோழிகள் என அத்தனை பேரும் வேனில் ஏற காத்திருக்கும் பொழுது கடைசி நேரத்தில் உன் பெட்டி படுக்கையுடன் வேனில் ஏறுகிறாள். மித்ரா தான் உடைய ஊருக்கு வருவது தனக்கு விருப்பமில்லை என்றாலும் மகேஷ்காக ஆனந்தி சம்மதிக்கிறாள்.

மித்ராவை எச்சரித்த ஆனந்தி

இருந்தாலும் மித்ராவிடம் நீ ஏதேனும் கெட்ட எண்ணத்துடன் வீட்டுக்கு வருவதற்கு நினைக்க வேண்டாம் என எச்சரித்து அழைத்து செல்கிறாள். மேலும் இவர்கள் எல்லோரும் செல்லும் வேலை ஆனந்தியின் அண்ணன் தான் முகமூடி போட்டுக் கொண்டு ஓட்டுகிறான்

ஆனந்தியுடன் திருவிழா கொண்டாட்டத்தில் மகேஷ் கலந்து கொள்வது மித்ராவுக்கு எப்படியும் கோபத்தை உண்டு பண்ணும். இதனால் மித்ரா அடுத்து எந்த மாதிரியான திட்டத்தை போடப் போகிறாள் என்பது இனிதான் தெரியும்.

திருவிழா கொண்டாட போகும் ஆனந்திக்கு வரும் ஆபத்தை மகேஷ் மற்றும் அன்பு எப்படி தடுத்து நிறுத்துகிறார்கள் என அடுத்த வாரம் பரபரப்பாக காட்ட இருக்கிறார்கள்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News