Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாகவே ஒரே கான்செப்ட் வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆனந்தி எக்கேடோ கெட்டுப் போகட்டும், அன்புக்கு வேற ஜோடி போடுங்க என ரசிகர்கள் கதறும் அளவுக்கு எபிசோடுகள் இருக்கிறது.
எல்லா சீரியலிலும் ஹீரோயினை ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் சிங்க பெண்ணே சீரியலில் மட்டும் ஹீரோயின் ஆனந்திக்கு நாளுக்கு நாள் வெறுப்பு தான் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அன்பு என்ன சொல்ல வருகிறான் என்று கூட கேட்காமல் அவனை எடுத்து எறிஞ்சு பேசுவது தான்.
போதாத குறைக்கு இப்போது நந்தா நான் தான் அழகன் என்று சொல்லி குட்டையை குழப்பி விட்டான். நந்தா, அழகனாக ஆனந்தி முன்னாடி வந்து நின்றாலும் அவளுக்கு ஏனோ அவனிடம் நெருங்கி பழக தயக்கம் இருக்கிறது.
இதை தெரிந்து கொண்ட நந்தா ஏதாவது தந்திர வேலை பண்ணி ஆவது ஆனந்தியை நெருங்கி விட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் அன்பு நான் தான் அழகன் என்று சொல்லியே ஆனந்தியை போலியான அழகனிடமிருந்து காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறான்.
சுக்கு நூறாகப்போகும் காதல் கோட்டை
நேற்றைய எபிசோடில் அன்புவின் திட்டத்தை தெரிந்து கொண்ட நந்தா முந்திக்கொண்டு ஆனந்தியை திரௌபதி அம்மன் கோவிலுக்கு சாயந்தரம் வரச்சொல்லி வற்புறுத்துகிறான். நந்தா தான் அழகன் என்று நினைத்து ஆனந்தி தன்னுடைய அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் இருப்பதை அவனிடம் ரொம்பவும் அழுது புலம்பி சொல்கிறாள்.
ஆனந்தியின் வீக்னஸ் இதுதான் என்று புரிந்து கொண்ட ஆனந்தா இனி அவளுடைய அக்காவின் கல்யாணத்தை வைத்து அவளை லாக் பண்ண திட்டமிட்டு வைத்திருக்கிறான். அதன் முதல் படியாக ஆனந்தியின் அக்காவுக்கு கல்யாணம் ஆக நந்தா நேர்த்திக்கடன் செய்வதுபோல் ஆனந்தி முன் நடிக்க இருக்கிறான்.
இப்படி ஒரு விஷயத்தை நந்தா செய்த பிறகு கண்டிப்பாக ஆனந்தி அவனை அழகனாகவே நினைத்து உருகப் போகிறாள். இன்னொரு பக்கம் யார் அந்த போலி அழகன் என கண்டுபிடிக்க அன்பு பிளான் போட்டுக் கொண்டு இருக்கிறான். இந்த போலி அழகனுக்கு வைப்பதற்குள் மகேஷ் கையில் தாலியோடு ஆனந்தியிடம் வந்து விடுவான் போல.
சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்
- கடைசி ஆயுதம், அழகனுக்கும், நந்தாவுக்கும் நடுவில் சிக்கி கொண்ட ஆனந்தி
- ஆனந்தியிடம் ஓவர் நெருக்கம் காட்டும் நந்தா, அன்புவின் முடிவு
- ஆனந்தி, அன்பு ஆட்டத்தை கலைக்க ரெடியான மகேஷ்