
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் ரசிகர்கள் மகேசை ஹீரோவாக ஏற்றுக்கொண்டு அன்பு மற்றும் ஆனந்தியை வில்லனாக்கி விடுவார்கள் போல.
ஏற்கனவே ஆனந்தியின் காதல் கை கூடாததால் மகேஷ் விரக்தியில் இருக்கிறான். இந்த நிலையில் தில்லைநாதனின் பேச்சை கேட்டு அன்பு மற்றும் ஆனந்தி மீண்டும் கம்பெனிக்குள் போகும் தப்பான முடிவை எடுக்கிறார்கள்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வார்டன் மனோன்மணிக்கு, அழகப்பன் போன் செய்து ஆனந்தி-மகேஷ் திருமணத்தை பற்றி பேசுகிறார்.
மேலும் கோகிலா திருமணத்தின் போது மகேஷை பற்றி பேசி ஆனந்தியிடம் சம்மதம் வாங்குகிறேன் என்று சொல்கிறார். இதனால் வார்டன் பெரிய அதிர்ச்சி அடைகிறார்.
மேலும் அன்பு ஆனந்தியிடம் நீ எப்போதும் மகேஷ் சாரிடம் எப்படி பேசி, பழகுவாயோ அதே போன்று இப்பவும் இரு, அதுதான் அவருடைய காயத்துக்கு மருந்து என்று சொல்கிறான்.
ஆனந்தியும், அன்புவின் பேச்சை கேட்டு கொண்டு மகேஷ் ரூமுக்கு விளக்கேற்ற போகிறாள். வெந்த புண்ணில் வேலை பாச்சுவது போல் அன்பு மற்றும் ஆனந்தி நடந்து கொள்வது சகிக்க முடியவில்லை. அன்புவின் கட்டளையை மீறி ஆனந்தி மகேஷிடம் இருந்து ஒதுங்குகிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.