வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிங்கப்பெண்ணில் குடோனில் மாட்டி கொண்ட அன்பு, ஆனந்தி.. மித்ரா, கருணாகரன் செய்த கூட்டு சதி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் மித்ரா தன்னுடைய சதி வேலையை ஆரம்பித்து இருக்கிறாள். நந்தா விஷயத்தில் அன்பு, மகேஷிடம் மித்ராவை மாட்டி விட்டது, மித்ரா சஸ்பெண்ட் ஆனது முதல் அன்புவை கம்பெனியிலிருந்து துரத்த கருணாகரன் கூட சேர்ந்து நேரம் பார்த்து காத்துக்கொண்டிருந்தாள்.

அன்பு மற்றும் ஆனந்தி சில தினங்களாக ரொம்பவும் நெருங்கி பழகுவதை அரவிந்த் மூலம் தெரிந்து கொண்டு அதை பகடை காயாக உபயோகப்படுத்த மித்ரா மற்றும் கருணாகரன் திட்டமிட்டு விட்டார்கள். ஏற்கனவே மகேஷிடம் அன்பு, ஆனந்தியை காதலிப்பதாக கொளுத்திப் போட்டு இருக்கிறார்கள்.

அதற்கு ஏத்த மாதிரி அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் தனியாக சாப்பிட போனதை பார்த்து மகேஷ் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறான். ஆனந்தி மற்றும் அவளுடைய தோழிகளுடன் ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட போக அன்பு திட்டமிட்டு இருந்தான்.

சரியான நேரம் பார்த்து கருணாகரன் நாளை காலை எனக்கு ஸ்டாக் ரிப்போர்ட் வந்தாக வேண்டும். நீ இங்கேயே இருந்து ரெடி பண்ணி கொடு என கேட்கிறார். அன்பும் அந்த ரிப்போர்ட்டை ரெடி பண்ண குடோனுக்கு சென்று வேலை செய்து கொண்டிருக்கிறான்.

மித்ரா, கருணாகரன் செய்த கூட்டு சதி

அன்பு இன்னைக்கு வீட்டுக்கு போக லேட் ஆகும், டீ போட்டு பிளாக்சில் ஊற்றி அவனிடம் கொடுத்து விட்டுப் போ என்று கருணாகரன் ஆனந்தியையும் குடோனுக்கு அனுப்புகிறான். அன்புவை அங்கே பார்த்த ஆனந்தி உங்களுக்கு நானும் உதவி செய்கிறேன் சீக்கிரமாக இந்த வேலையை முடித்துவிட்டு நாம் சாப்பிட போகலாம் என்று சொல்கிறாள்.

சமயம் பார்த்து அரவிந்த் இவர்கள் இருவரையும் குடோனுக்குள் வைத்து பூட்டி விடுகிறான். அதே நேரத்தில் ஆனந்தி மற்றும் அன்புக்கு பதிலாக மித்ரா அதில் கையெழுத்து போடுகிறாள். இப்போ இவங்க ரெண்டு பேரும் குடோனுக்குள்ள சிக்கி இருப்பது போல் காட்டப்படுகிறது.

கம்பெனி ரெக்கார்டு படி இருவரும் வெளியே போனது போல் மித்ரா ஏற்பாடு செய்து வைத்திருக்கிறாள். இரவு முழுவதும் ஆனந்தி ஹாஸ்டலுக்கு போகாமல் இருந்தால் வாடன் என்ன செய்வார், இவர்கள் ஒன்றாக இரவு முழுவதும் தங்கியிருந்தது தெரிந்தால் மகேஷ் என்ன செய்யப் போகிறான் என அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News