சிங்கப்பெண்ணில் தில்லை நாதனை மலை போல் நம்பும் அன்பு-ஆனந்தி.. அடிபட்ட பாம்பாய் காத்திருக்கும் கூட்டம்!

Singapenne
Singapenne

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தன் மீது கொலை பழி சுமத்திய மகேசை அன்பு மீண்டும் மீண்டும் நம்புவது சீரியல் ரசிகர்களுக்கே எரிச்சலை கிளப்பி இருக்கிறது.

இந்த கம்பெனியில் இருந்து வெளியே வந்து அழகப்பன் இடம் பேசி திருமணம் செய்து கொள்ளும் கதையைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அன்புவின் அம்மா லலிதா இனி என் மகனும் மருமகளும் கம்பெனி வேலைக்கு வர மாட்டார்கள் என்றும் சொன்னது நல்ல முடிவு.

அடிபட்ட பாம்பாய் காத்திருக்கும் கூட்டம்!

ஆனால் இன்றைய ப்ரோமோவில் தில்லைநாதன் வீடு தேடி வந்து அன்பு மற்றும் ஆனந்தியை மீண்டும் வேலைக்கு கூப்பிடுகிறார்.

அன்பு, மகேஷுக்காக கம்பெனிக்கு போக முடிவெடுக்கிறான். ஏற்கனவே கொலை குற்றம் வரை சென்ற அரவிந்த் அடுத்து என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதில் சந்தேகமே இல்லை.

அன்பு மற்றும் ஆனந்தியை மீண்டும் கம்பெனிக்குள் பார்த்தால் பார்வதி மற்றும் மித்ரா மிருகமாய் மாறிவிட கூட வாய்ப்பு இருக்கிறது.

தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு கம்பெனியில் வேலை செய்யும் அன்புவே காதலிக்கும் ஆனந்தியை பார்க்கும் பொழுது மகேஷ் மீண்டும் மீண்டும் காயப்படத்தான் செய்வான்.

இப்படி ஒரு கூட்டமே தங்களுக்கு எதிராக திரும்பி இருக்கும் போது தில்லைநாதனின் பேச்சை கேட்டு அன்பு மற்றும் ஆனந்தி கம்பெனிக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.

இதனால் இனிவரும் எபிசோடுகளில் என்னவெல்லாம் நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement Amazon Prime Banner