புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் அன்பு, ஆனந்தி, மகேசுக்கு ஒரே நேரத்தில் வைக்கப்பட்ட ஆப்பு.. இனிதான் மித்ராவின் ஆட்டம் ஆரம்பம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயம் இந்த வாரம் நடந்திருக்கிறது. ஆனந்தியின் சொந்த ஊரில் நடந்த திருவிழாவை பார்க்க சென்ற எல்லோரும் மீண்டும் சென்னைக்கு திரும்பி விட்டார்கள்.

இனி கம்பெனியில் என்ன நடக்கப்போகிறது என்பது தான் அடுத்த கட்ட கதை நகர்வு. இதில் தான் யாருமே எதிர்பார்க்காத திருப்பம் நடந்திருக்கிறது. வீட்டுக்கு வந்த அன்பு, மகேஷ் ஆனந்தியை காதலிப்பதை பற்றி சொன்னதை எண்ணி கதறி அழுகிறான்.

அந்த நேரத்தில் அன்புவின் மனசாட்சி அழகனாக வந்து அவனிடம் பேசுகிறது. தனக்கு முன்னாடி ஆனந்தியை காதலித்தது மகேஷ் தான் என அன்பு தன்னுடைய காதலை தியாகம் செய்ய காரணம் சொல்கிறான்.

ஆனால் அவனுடைய மனசாட்சி அழகன் என்னதான் மகேஷ் ஆனந்தியை முதலில் காதலித்து இருந்தாலும், ஆனந்தி காதலிப்பது அழகனை தான் என்பதை நியாயப்படுத்துகிறான். இதனால் அன்புக்கு இந்த விஷயத்தில் ஒரு தெளிவு கிடைக்கிறது.

அன்பு, ஆனந்தி, மகேசுக்கு ஒரே நேரத்தில் வைக்கப்பட்ட ஆப்பு

இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஆனந்தி அன்புக்கு போன் செய்கிறாள். வீட்டுக்கு போயிட்டீங்களா, அம்மா ஏதாச்சும் சொன்னாங்களா என அக்கறையோடு விசாரிக்கிறாள். இந்த போன் கால் அன்புக்கு இன்னும் தைரியத்தை கொடுக்கிறது.

காலையில் வழக்கம் போல ஆனந்தி கம்பெனிக்கு கிளம்புகிறாள். ஆனந்தியின் சைக்கிளில் காற்று இறங்கி விட்டதால் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாள். ஒருவழியாக அன்புவுக்கு போன் செய்யலாம் என முடிவெடுத்து போன் செய்கிறாள்.

போன் போவதற்கு முன்னமே அன்பு ஹாஸ்டல் வாசலில் வந்து நிற்கிறான். இது ஆனந்திக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது. ஆனந்தி முழிப்பதை பார்த்து அன்பு என்ன என்று கேட்கிறான். அதற்கு ஆனந்தி இப்போதுதான் உங்களுக்கு போன் பண்ணலாம் என்று போன கையில எடுத்தேன் ஆனால் நீங்களே வந்து நிக்கிறீங்க என்று சொல்கிறாள்.

அந்த நேரத்தில் அன்புவின் மனசாட்சி ஆன அழகன் ஆனந்தி தனக்கு எது தேவைப்பட்டாலும் உன்னை தான் தேடுகிறாள் எதையாவது புரிந்து கொள் என்று சொல்கிறது. ஒரு வழியாக இரண்டு பேரும் கம்பெனிக்கு கிளம்புகிறார்கள்.

அப்போது ஹாஸ்டல் வாட்ச்மேன் ஆனந்தியிடம் உனக்கு அழகனை விட இந்த அன்பு தான் பொருத்தமாக இருப்பான் யோசிச்சு முடிவெடு என்று சொல்லி அனுப்புகிறார். அதே நேரத்தில் கம்பெனிக்கு வந்த மித்ராவிடம் கருணாகரன், என்ன ஆனந்தியே அங்கேயே விட்டுட்டு வந்துடுவேன் சொன்னிங்க, எல்லா பிளானும் போச்சா என்று கேட்கிறார்.

மித்ரா அங்கு நடந்த எல்லாவற்றையும் சொல்கிறாள். அப்போது கருணாகரன் கர்ணனுக்கு குண்டலம் போல் ஆனந்திக்கு அன்பு மகேஷும் கூட இருக்கும் வரை அவளை எதுவுமே பண்ண முடியாது என்று சொல்கிறார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷின் அப்பா மீட்டிங் வைத்து மகேஷ் சரமாரியாக கேள்வி கேட்கிறார்.

யாரை கேட்டு அன்புக்கு எல்லா பவரையும் கொடுத்தாய் என்று சொல்லி மகேஷ் இடம் கோபப்படுகிறார். மித்ரா மற்றும் கருணாகரன் திட்டமிட்டபடி அன்புவிடமிருந்து எல்லா பவரும் பிடுங்கப்படுகிறது. அதன்பின்னர் கருணாகரன் வேண்டுமென்றே அன்புவிடம் வம்பு இழுக்கிறான்.

அப்போது அன்பு உங்களுக்கு இருக்கும் எல்லா பவரும் எனக்கும் இருக்கிறது என்று சொல்கிறான். உடனே கருணாகரன் உன்னுடைய பவர பிடுங்கி அஞ்சு நிமிஷம் ஆச்சு என்று சொன்னதும் அன்புக்கு அதிர்ச்சியாக அமைகிறது. கூட இருக்கும் ஆனந்தி எதுவாக இருந்தாலும் மகேஷ் சார் வந்து சொல்லட்டும் என்கிறாள்.

அந்த இடத்திற்கு வரும் மித்ரா இனி மகேஷ் இந்த இடத்திற்கு வரவே மாட்டான் என சொல்கிறாள். மித்ராவுடன் சேர்ந்து அரவிந்தும் அந்த இடத்தில் வந்து நிற்கிறான். இது அன்பு மற்றும் ஆனந்திக்கு பெரிய அதிர்ச்சியாக அமைகிறது. இனி சில நாட்களுக்கு மித்ராவின் ஆட்டம் தான் சிங்க பெண்ணில் அதிகமாக இருக்கும்.

Trending News