ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிங்கப்பெண்ணில் மகேஷை முட்டாளாக்கும் அன்பு-ஆனந்தி.. விபரீத முடிவால் வர போகும் பேராபத்து!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பும் ஆனந்தியும் எப்போது சேர்வார்கள் என்று ஆசை இந்த சீரியலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இருந்தது.

ஆனால் கடைசி இரண்டு நாட்களில் அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு சில விஷயங்களில் அன்பு எடுக்க முடிவு அவனுக்கு ஒரு பெரிய ஆபத்து வரப்போவதை தான் உணர்த்துகிறது. நேற்று தன்னுடைய ஹாஸ்டல் தோழிகள் மற்றும் முத்து, சௌந்தர்யா, ஜெயந்தி எல்லோரையும் ரெஸ்டாரண்டுக்கு வரவைத்து அன்பு தான் அழகன் என்ற உண்மையை சொல்கிறாள் ஆனந்தி.

ரெஜினா ஏற்கனவே ஆனந்தி அழகனை கண்டுபிடித்து விட்டதாக சொல்கிறாள் நீங்கள் இந்த இடத்திற்கு வாருங்கள் என மகேஷுக்கு தகவல் கொடுத்திருந்தாள். இந்த விஷயத்தை அன்பு விடம் சொன்னதும் அன்புக்கு என்ன செய்வது என்றே முதலில் தெரியவில்லை.

மகேஷை முட்டாளாக்கும் அன்பு-ஆனந்தி

பின்னர் ஆனந்தி இனிமே அழகனை பற்றி பேசவே மாட்டேன் என்று சொல்ல தான் கூப்பிட்டாள் என்று பொய் சொல் என ரெஜினாவுக்கு சொல்லிக் கொடுத்து அனுப்புகிறான். உடனே ரெஜினாவும் மகேஷிடம் போய் ஆனந்தி இனிமே அழகனை பற்றி பேசவே மாட்டாள், அழகன் என்று யாருமே கிடையாது என்று சொல்வதற்காக எங்களை வர வைத்தாள் என்று மகேஷிடம் பொய் சொல்லுகிறாள்.

இதை கேட்டு மகேஷுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. தன்னுடைய காதலுக்கு தடையாக இருப்பது அழகன் தான் என்று இவ்வளவு நாள் மகேஷ் நம்பிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போது அழகன் பற்றி நான் பேசவே மாட்டேன் என்று ஆனந்தி சொல்வதால் இனி அவனுடைய காதல் ரூட் கிளியர் என அவன் நம்புகிறான்.

சரியோ என்ன நடந்தது என்ற உண்மையை மகேஷிடம் சொல்லி இருக்கலாம் அன்பு. ஆனால் மீண்டும் மீண்டும் அன்பு அதை மறைப்பதால் ஆனந்தி மீதான காதல் மகேஷுக்கு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். போதாத குறைக்கு மகேஷ் சொல்கிறான் என்பதற்காக அன்பு மற்றும் ஆனந்த் இருவருமே கம்பெனிக்கு மீண்டும் வேலைக்கு திரும்புகிறார்கள்.

ஆனந்தியையும் அன்பையும் அந்த இடத்தில் பார்த்ததும் கருணாகரன் தாம் தூம் என குதிக்கிறார். மித்ராவுக்கு போன் பண்ணி நீங்களும் மகேஷரும் உடனே இங்கே கீழே வாங்க என போன் பண்ணுகிறார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு மற்றும் ஆனந்தி இங்கதான் வேலை செய்வாங்க என மகேஷ் ரொம்ப ஸ்ட்ராங்காக சொல்கிறான்.

உடனே கருணாகரன் அப்ப நான் இங்க வேலை செய்ய மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு மகேஷ்வரி அப்போ வெளியே போங்க என்று சொல்வது போல் ப்ரோமோ முடிந்திருக்கிறது. குறைந்தபட்சம் இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்யாமல் ஆவது இருந்தால் பிரச்சனை கொஞ்சம் குறையும்.

ஆனால் அன்பு ஆனந்தி ஒரே இடத்தில் வேலை செய்தால் தான் சீரியல் ஒப்பேறும். இனி இவர்கள் இங்கே வேலை செய்து கொண்டே காதலிக்க, மித்ரா மற்றும் கருணாகரன் இவர்கள் எதில் மாட்டுவார்கள் என காத்து கிடக்கப் போகிறார்கள்.

அன்பு மற்றும் ஆனந்தி மீது இருக்கும் அதீத நம்பிக்கையால் மகேஷ் இருவருக்கும் ரொம்ப சப்போர்ட் பண்ணப் போகிறான். எப்படி பார்த்தாலும் எவ்வளவு நாளைக்கு தங்கள் காதல் விஷயத்தை மகேஷிடம் மறைக்கிறார்களோ அதற்கு எல்லாம் சேர்த்து அவர்களுக்கே நெகட்டிவாக எல்லாம் திரும்ப போகிறது.

அது மட்டுமில்லாமல் 48 நாளில் வீட்டில் எந்த விசேஷமும் நடக்கவில்லை என்றால் பெரிய அவமானம் வரும் என ஆனந்தி வீட்டு வாசலில் நின்று குடுகுடுப்புக்காரன் சொல்லி இருக்கிறான். இதற்காக ஆனந்தியின் அப்பா என்ன முடிவு எடுக்கிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News