வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிங்கப்பெண்ணில் ஆனந்தியின் மனதை வென்ற மகேஷ்.. அன்புக்கு செவரக்கோட்டையில் காத்திருக்கும் ஆபத்து

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் ஹீரோ அன்புவுக்கு அடுத்த வாரம் பெரிய ஆபத்து காத்திருக்கிறது. ஆனந்திக்காக அன்பு எவ்வளவு பெரிய ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்க தயாராக இருக்கிறான்.

ஆனந்தியின் பணக்கஷ்டத்தை சரி செய்து குடும்ப நிலத்தை காப்பாற்ற எவ்வளவு அன்பு போராடினான். ஆனால் அவனுடைய பொருளாதார சூழ்நிலைக்கு அவனால் 10 லட்சத்தை ரெடி பண்ண முடியவில்லை. ஆனந்தி மற்றும் அன்பு வங்கியில் வைத்து பார்த்த மகேஷ் அன்புவை நேரில் தேடி வருகிறான்.

அன்புவிடம் என்ன நடந்தது என தீர விசாரிக்கிறான். அன்பு எல்லா விஷயத்தையும் சொன்னதும் இதை ஏன் முன்னாடியே எனக்கு சொல்லவில்லை என மகேஷ் ரொம்பவே வருத்தப்படுகிறான். ஏற்கனவே ஆனந்தியால் மகேஷுக்கு நிறைய பிரச்சனை வந்துவிட்டதால் இந்த விஷயம் தெரிய கூடாது என ஆனந்த் சொன்னதாக அன்பு சொல்கிறான்.

அன்புக்கு காத்திருக்கும் ஆபத்து

மகேஷ் அன்புவிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்து இதை நான் கொடுத்தேன் என்று ஆனந்தியிடம் சொல்லாதே என சொல்லி விடுகிறான். உடனே பணத்தோடு ஹாஸ்டலுக்கு ஆனந்தியை தேடி போன அன்புக்கு அங்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

உண்மையிலேயே யார் இந்த பத்து லட்சத்தை கொடுத்தார்கள் என என் தலையில் அடித்து சத்தியம் பண்ணி சொல்லுங்கள் அன்பு என ஆனந்தி கேட்கிறாள். அன்பு ரொம்பவும் மன கஷ்டத்துடன் ஆனந்தி தலையில் சத்தியம் பண்ணி தன்னுடைய நண்பன் பணம் கொடுத்ததாக சொல்லிவிடுகிறான்.

இருவரும் உடனடியாக செவரக்கோட்டைக்கு கிளம்புகிறார்கள். ஆனந்திக்கு அன்பு பணம் ரெடி பண்ணி கொடுத்தது மற்றும் இருவரும் ஊருக்கு போவது மித்ராவுக்கு தெரிந்து விட்டது. உடனே மித்ரா சுயம்புலிங்கத்திற்கு போன் பண்ணி நடந்ததை எல்லாம் சொல்கிறாள்.

அது மட்டும் இல்லாமல் ஆனந்தி ஊர் வந்து சேர்வதற்குள் அந்த இடம் அழகப்பனிடம் இருந்து பறிக்கப்பட வேண்டும் என திட்டத்தையும் போட்டுக் கொடுக்கிறாள். உடனே சுயம்புலிங்கம் மூக்கனை நேரில் அழைத்து ஆனந்தி வருவதற்குள் பத்திரத்தில் கையெழுத்து வாங்குமாறு அறிவுறுத்துகிறான்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு மற்றும் ஆனந்தி ஊருக்குள் வரும்பொழுது போலீசார் அவனை துரத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் துரத்துகிறவர்கள் போலி போலீஸ் என ஆனந்தி கண்டுபிடிப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் மூக்கையன் அழகப்பனிடம் பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறான். அப்போது அழகப்பன் பணம் கைக்கு வந்துவிட்டது என சொல்வது போல் அந்த ப்ரோமோ வீடியோ முடிந்திருக்கிறது. எப்படி பார்த்தாலும் அன்பு பணத்தை கொடுத்து ஆனந்தி இடத்தை காப்பாற்றி விடுவான்.

இருந்தாலும் மகேஷ் தான் இந்த பணத்தை கொடுத்து இருக்கிறான் என ஆனந்திக்கு தெரிய வரும் பொழுது அவன் மீதுதான் அவளுக்கு மரியாதை அதிகமாகும். நான் தான் அழகன் என்று அன்பு சொல்லவரும் வேளையில் ஆனந்தி எந்த மாதிரி சூழ்நிலையில் இருப்பாள், எப்படி ஒரு முடிவை எடுப்பாள் என தெரியவில்லை. ஆனால் ஆனந்திக்காக எந்த ஒரு ஆபத்தையும் சந்திக்கும் மன தைரியத்துடன் அன்பு இருக்கிறான்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News