சனிக்கிழமை, மார்ச் 1, 2025

சிங்கப்பெண்ணில் பொறுமையை இழந்த அன்பு.. மகேஷிடம் இருந்து காதலை காப்பாற்ற போராடும் ஆனந்தி!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது.

ஆனந்தி மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் மகேஷ் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளுவான் என இவ்வளவு நாள் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆனந்தியே வாயைத் திறந்து நான் அன்பு வைத்தால் காதலிக்கிறேன் என்று சொன்னால் கூட மகேஷ் நம்பும் நிலைமையில் இல்லை.

பொறுமையை இழந்த அன்பு

அன்பு ஆனந்தி பாடலை பற்றி சொன்ன வார்டனை ஒரே நிமிஷத்தில் மரியாதை இல்லாமல் பேசி விடுகிறான்.

மகேஷ் காதலித்த விதம் தப்பு என்று சொல்ல முடியாது என்றாலும், தற்போதைய அவன் நடந்து கொள்ளும் விதம் நேயர்களுக்கு ஒரு வித வெறுப்பை தான் கொடுத்திருக்கிறது.

ஆனந்தி வாயை திறந்து நான் அன்பு வைத்தான் காதலிக்கிறேன் என்று மகேஷிடம் சொல்கிறாள். அப்போதும் மகேஷ் இதை நம்புவதாய் இல்லை.

உடனே ஆனந்தி அன்பு விடம் நீங்க ஆனந்தியை தான் காதலிக்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள் என்று சொல்கிறாள்.

உடனே அன்பு நான் தான் அழகன், நாங்கள் இரண்டு பேரும் தான் காதலிக்கிறோம் என மகேஷிடம் சொல்கிறான்.

இதனால் மிருகமாய் மாறிப்போன மகேஷ் கல்லை தூக்கி அன்பு தலையில் போட முயற்சி செய்கிறான்.

குறுக்கே ஆனந்தி போய் விழுகிறாள். மகேஷ் எந்த மாதிரி முடிவை எடுக்கப் போகிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News