வியாழக்கிழமை, மார்ச் 6, 2025

சிங்கப்பெண்ணில் ரவுடிகளிடம் சிக்கும் அன்பு, போராடும் ஆனந்தி.. மித்ராவால் மகேசுக்கு ஏற்பட்ட சிக்கல்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு எங்கிருந்துதான் பிரச்சனை பார்சலில் வரும் என்று தெரியவில்லை.

வாராவாரம் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வதும் பின்னர் அதிலிருந்து மீண்டு வருவதுவாகவே இருக்கிறார்கள்.

இந்த முறை மித்ரா செய்த வேலையா அன்புவின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை. மகேஷ் ஆனந்தியை வெறுக்கும் இந்த சமயத்தை தனக்கு சாதகமாக உபயோகிக்க நினைக்கிறாள் மித்ரா.

ரவுடிகளிடம் சிக்கும் அன்பு

மித்ரா மகேஷை காதலித்து விடுவாளோ என்ற பயத்தில் அரவிந்த் மகேஷை பழிதீர்க்க வேறொரு திட்டத்தை போட்டு விட்டான்.

ஆட்களை வைத்து அன்புவை கொலை செய்து விட்டு அந்த கொலை பழியை மகேஷ் மீது போடுவது தான் அரவிந்தின் திட்டம்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரவுடிகளிடம் அன்பு சிக்கிக் கொள்வது போலவும் ஆனந்தி அவனை காப்பாற்ற போராடுவது போலவும் காட்டப்பட்டிருக்கிறது.

எப்படியும் ரவுடிகள் அன்புவை கொல்வதற்கு வாய்ப்பு இல்லை. அன்பு இந்த சதி வளையல் இருந்து எப்படி தப்பிக்கிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News