செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அழுது புலம்பும் மகேஷ்.. நட்பா, காதலா முக்கிய முடிவெடுக்கும் அன்பு.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் அடுத்த வார எபிசோடுகள் பரபரப்பான திருப்பங்களுடன் நிறைந்திருக்க போகிறது.

அன்புவின் பேச்சை கேட்டு ஆனந்தி அந்த பிறந்தநாள் விழாவுக்கு போகாமல் இருந்திருந்தால் கூட இவ்வளவு பிரச்சனை இல்லை.

மகேஷ் சாரிடம் எல்லாம் உண்மையையும் சொல்லப்போகிறேன் என ஆனந்தி மொத்தமாக சொதப்பிவிட்டாள்.

அன்பு வைத்தான் காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் கூட எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

நட்பா, காதலா முக்கிய முடிவெடுக்கும் அன்பு

அதை சொல்லாமல் நான் உங்களை தெய்வமாய் பார்க்கிறேன் என அல்வா கொடுத்து விட்டாள். மகேஷ் ஆனந்தி அழகனை தான் காதலித்துக் கொண்டிருக்கிறாள் என தவறாக நினைத்துக் கொள்கிறான்.

நன்றாக குடித்துவிட்டு ஹாஸ்டலுக்கு சென்று பிரச்சனை பண்ணுகிறான். இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது ரெஜினா அன்புவுக்கு போன் பண்ணி ஹாஸ்டலுக்கு வர வைக்கிறாள்.

அன்பு மகேசை சமாதானம் செய்து காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு அழைத்துப் போகிறான். போகிற வழி முழுக்க மகேஷ் ஆனந்தியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கண்ணீர் வடிக்கிறான்.

இது அன்புக்கு பெரிய தர்மசங்கடமாக மாறிவிடுகிறது. மகேஷ் இன் கண்ணீரை பார்த்து அந்த நட்புக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என அன்பு நினைக்கலாம்.

அதை தாண்டி ஆனந்தியையும் அவனால் விட்டுக் கொடுக்க முடியாது. நட்பு மற்றும் காதலுக்குள் சிக்கிக் கொண்டு அன்பு எந்த மாதிரி முடிவெடுக்கிறான் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News