புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்கப்பெண்ணில் அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற அன்பு எடுக்கும் முடிவு.. மகேஷிடம் சரணடையும் ஆனந்தி?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் நிறைய திருப்பங்கள் ஏற்பட இருக்கிறது.

அன்புவின் அம்மா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவருடைய தலையில் ஆபரேஷன் பண்ண பெரிய தொகை தேவைப்படுகிறது.

எப்படியும் இந்த தொகையை கொடுத்து உதவ போவது மகேஷ் தான் என்பது நன்றாக தெரிந்து விட்டது. அதே நேரத்தில் ஆனந்தி அன்புவின் அம்மாவை ரொம்பவும் அக்கறையோடு பார்த்துக் கொள்கிறாள்.

அன்பு எடுக்கும் முடிவு

இன்னொரு பக்கம் மகேஷுடன் எப்படியாவது ஆனந்தியை சேர்த்து வைத்த விட வேண்டுமென வார்டன் முடிவெடுக்கிறார்.

அன்பு தான் அழகன் என்று தெரிந்த பின்னாலும் ஆனந்தியால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

இதுவரையிலும் ஆனந்தி யாருக்கு ஜோடியாக போகிறான் என்பது பெரிய சந்தேகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் குறித்து நிறைய வியூகங்கள் எழுந்து இருக்கின்றன.

அதில் அன்புவின் அம்மா சீரியஸான நிலைமையில் அவனிடம் தன்னுடைய கடைசி ஆசையை சொல்வது ஆகவும் பேசப்படுகிறது.

அம்மாவின் ஆசைக்காக அன்பு துளசியை திருமணம் செய்து கொள்வான், ஆனந்தி மகேஷ்க்கு தான் என்றும் கதை நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ அன்புவின் அம்மா கண் விழித்தால் தான் சீரியல் அடுத்த கட்டம் எதை நோக்கி நகரும் என்பது தெரியும்.

Trending News