வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிங்கப்பெண்ணில் அன்புவை லாக் பண்ணிய அம்மா.. நேரம் பார்த்து ஆனந்தியை கவுத்த மகேஷ்

Singapenne: சிங்கப்பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு இன்று வெளியான ப்ரோமோ மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்த சீரியலை பலரும் தொடர்ந்து பார்ப்பதற்கு ஹீரோ அன்பு மட்டும் தான் ஒரே காரணம்.

அன்பு நான் தான் அழகன் என்று ஆனந்தியிடம் சொல்ல வேண்டும், அவனின் காதல் கை கூட வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசையும். ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மைய்யமாக கொண்டு இயக்குனர் கதையை நகர்த்துவது தான் பெரிய சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அன்பு ஒவ்வொரு முறையும் நான் தான் அழகன் என்று சொல்ல முற்பட போதெல்லாம் ஆனந்திக்கு எதாவது ஒரு ஆபத்து வந்துவிடுகிறது. நகை திருடு போனது, சொந்த நிலத்தை காப்பாற்ற போராடியது என கடந்த 2 வாரங்களாக ஒரே மாதிரி கதை தான்.

அன்புவை லாக் பண்ணிய அம்மா

இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அன்புவின் அம்மா மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். ஆனந்திக்காக வீட்டு பாத்திரத்தை கேட்ட போதே அன்புவின் அம்மா உஷாராகி விட்டார்.

இன்று கம்பெனிக்கு கிளம்பிய அன்புவிடம், கல்யாணத்தை பற்றி பேசுகிறார். உனக்கு விருப்பம் இல்லைனாலும் நா சொல்ற பொண்ண நீ கல்யாணம் பண்ணி தான் ஆகணும் என்று சொல்கிறார். அதே நேரத்தில் ஆனந்தி அன்புவிடம் மீண்டும் அழகன் யாரென்று சொல்லுங்கள் என்று கேட்கிறார்.

அன்பு எதுவும் சொல்லமால் மௌனமாகவே இருக்கிறார். கம்பெனியில் ஆனந்தியை சந்தித்த மகேஷ், அன்பு முன்னிலையில் சொந்த நிலத்தை காப்பாத்திட்டியா என்று கேட்கிறான். இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று ஆனந்தி உங்களுக்கு எப்படி அது தெரியும் என்று கேட்கிறாள். ம

கேஷ் இதை சொல்லும் போதே 10 லட்சம் பணம் கொடுத்தது அன்பு தான் என ஆனந்தி கணிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அம்மாவின் பிடிவாதம், ஆனந்தியின் பண சிக்கலை நினைத்து அன்பு, ஆனந்தியை மகேஷுக்கு விட்டு கொடுத்து விடுவானோ என்பது தான் எல்லோருடைய சந்தேகமாகவும் இருக்கிறது.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News