ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

சிங்கப்பெண்ணில் முக்கிய முடிவெடுக்கும் அன்பு, பின் வாங்கும் ஆனந்தி.. கடைசி முயற்சியை கையில் எடுத்த மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின்இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக அன்பு தனக்கும் துளசிக்கும் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்தி விட்டான்.

அது மட்டுமில்லாமல் ஆனந்தியை காதலிப்பது பற்றியும் தன்னுடைய அம்மாவிடம் தைரியமாக சொல்லி விட்டான்.

ஆனால் அவனுடைய அம்மா எந்த காலத்திலும் இவள் என் வீட்டிற்கு மருமகளாக வர முடியாது என உறுதியாக சொல்லிவிடுகிறார்.

துளசியின் அப்பா இந்த விஷயத்தில் எந்த பிரச்சனையும் பண்ணாமல் ஒதுங்கி கொண்டார். ஆனால் துளசியின் அம்மா இதை விடுவதாக இல்லை.

இதிலிருந்து அடுத்து துளசியின் பிரச்சனை அன்பு மற்றும் ஆனந்தியை வளைக்க இருப்பது நன்றாக தெரிகிறது.

கடைசி முயற்சியை கையில் எடுத்த மகேஷ்

இனி அடுத்த வாரத்தில் மகேஷ், ஆனந்தியை காதலிப்பதை வெளிப்படுத்துவதை நோக்கி நகர இருக்கிறது.

மகேஷ் தன்னுடைய பிறந்தநாளுக்கு கம்பெனியில் இருப்பவர்கள் மற்றும் தன்னுடைய உறவினர்கள் அத்தனை பேரையும் அழைக்க இருக்கிறான்.

அந்த பிறந்தநாள் விழாவில் ஆனந்தியை காதலிப்பதை பற்றி எல்லோரும் முன்னிலையிலும் சொல்வதற்கு மகேஷ் திட்டமிட்டு இருக்கிறான்.

இதை அன்பு விடமும் வந்து சொல்கிறான். இந்த விஷயம் நடந்து விடக்கூடாது அதற்கு முன் மகேஷிடம் உண்மையை சொல்ல வேண்டும் என அன்பு முடிவெடுக்கிறான்.

அன்பு வை நான் எந்த பிரச்சனையும் இல்லாமல் காதலிக்க வேண்டும் என ஆனந்தி தன்னுடைய தோழிகளிடம் சொல்கிறாள்.

அது மட்டும் இல்லாமல் தன்னுடைய அக்காவின் திருமணமும் நடைபெற இருப்பதால் தற்போதைக்கு தன்னுடைய காதல் வெளியில் தெரிய வருவதை ஆனந்தி விரும்பவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மகேஷ் பிறந்தநாள் விழாவில் ஆனந்தியை காதலிப்பதை பற்றி வெளியில் சொல்வானா, அதற்குள் அன்பு தங்களுடைய காதல் விஷயத்தை வெளியில் கொண்டு வருவானா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News