Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தி விஷயத்தில் அன்பு முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறான். ஒரு வழியாக செவரக்கோட்டை எபிசோடுகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது.
ஊருக்கு கிளம்பும் நேரத்தில் எப்படியாவது கல்யாணத்தைப் பற்றி பேசி விட வேண்டும் என மகேஷ் முடிவெடுக்கிறான். ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் பேசுவதற்கு மகேஷ் தொடங்கும் போது மித்ரா போனை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறாள்.
தில்லை அங்கிள் உன்னிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார் மகேஷ் என போனை கொடுக்கிறாள். போனை வாங்கிய மகேஷ் கிட்ட மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. மகேஷிடம் இதுவரை கோபப்படாத அவளுடைய அப்பா அந்த போன் காலில் ரொம்பவும் கோபமாக பேசுகிறார்.
ஆனந்தி விஷயத்தில் அன்பு எடுத்த முடிவு
உன்னால் என்னுடைய கம்பெனிக்கு ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டது உடனே சென்னை கிளம்பி வா என உத்தரவிடுகிறார். இந்த குழப்பத்தால் மகேஷ் ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் பேசாமலேயே சென்னை வந்து விடுகிறான்.
சென்னை வந்த மகேஷ் இடம் அவனுடைய அப்பா ஒரு மிகப்பெரிய டீல் கம்பெனியை விட்டு விசாரணை பற்றி கோபமாக சொல்கிறார். நீ கம்பெனியை பார்ப்பதற்காகத்தான் வருகிறாய் என நான் பெருமையாக நினைப்பேன்.
ஆனால் நீ ஆனந்திக்காகத்தான் கம்பெனிக்கு வந்திருக்கிறாய் என கொஞ்சமும் யோசிக்காமல் மகேஷிடம் பேசி விடுகிறார். அதே நேரத்தில் ஆனந்தி மற்றும் அவளுடைய தோழிகளை ஹாஸ்டலில் அன்பு இறக்கி விடுகிறான்.
அப்போது வாட்ச்மேன் அவர்களிடம் ஊரிலிருந்து வந்ததிலிருந்து ரொம்பவும் சோகமாக இருக்கிறார் ஏன் என தெரியவில்லை என்று சொல்கிறார். அதே நேரத்தில் ஆனந்தி அன்பு விடம் ஊரில் இருக்கும் போது உங்களுக்கு அழகன் யார் என்று தெரியும் என சொன்னிங்கதானே. அழகன் யார் நீ என்கிட்ட சொல்லுங்க என கேட்கிறாள்.
அன்பு இதைப் பற்றி எதுவுமே பேசாமல் வீட்டிற்கு சென்று விடுகிறான். வீட்டிற்கு சென்ற அன்பு ஆனந்தி மற்றும் மகேஷ் சொன்ன விஷயத்தை ஞாபகப்படுத்தி கண்ணீர் விட்டு கதறுகிறான். அதுமட்டுமில்லாமல் ஆனந்தி நினைவாக அவன் வைத்திருக்கும் பொருட்களை எல்லாம் பார்த்து ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுகிறான்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு இந்த விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது. அதாவது மகேஷ் தான் ஆனந்தியை காதலிக்கிறான். ஆனந்தி மனசு முழுக்க அழகன் தான் இருக்கிறான்.
எனவே தன்னை அழகன் என்று வெளிப்படுத்திக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று முடிவுக்கு வருவது போல் காட்டப்பட்டு இருக்கிறது. ஆனந்தியை ஹாஸ்டலுக்கு வந்து அன்பு கம்பெனிக்கு அழைத்து செல்கிறான்.
அப்போது ஹாஸ்டல் வாட்ச்மேன் ஆனந்தியிடம் அந்த அழகன் யார் எல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் இந்த அன்பு உனக்கு சரியாக இருப்பான் என்று சொல்கிறார். இதற்கு ஆனந்தி சிரித்துக் கொண்டே செல்வது போல் குரோமோ காட்டப்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் மகேஷ் கம்பெனி விஷயத்தில் நிறைய தலையிட்டு மித்ரா மற்றும் கருணாகரனை பள்ளி பிடுங்கி பாம்புகளாக வைத்திருந்தான். இப்போது தில்லை நாதனை வைத்து கம்பெனியின் மொத்த பொறுப்புகளையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வர மித்ரா சதி திட்டம் தீட்டுகிறாள்.
கம்பெனி பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதால் இனி கொஞ்ச நாளைக்கு மகேஷ் ஆனந்தி விஷயத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டான். இந்த கேப்பில் அன்பு தன்னை அழகாக வெளிப்படுத்திக் கொள்வானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- அன்பு வாழ்க்கையை புரட்டி போட்ட 2 சம்பவங்கள்
- சிங்கப்பெண்ணில் போட்ட திட்டத்தை நிறைவேற்ற போகும் சுயம்புலிங்கம், மித்ரா
- சிங்கப்பெண்ணில் காதல் ஆட்டத்தில் இருந்து விலகும் மகேஷ், ஆபத்தை நெருங்கும் ஆனந்தி
- சிங்கப்பெண்ணில் ஆனந்திக்கு ஏற்பட போகும் அசிங்கம்