சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சிங்கப்பெண்ணில் அன்பு விஷயத்தில் ஆனந்தியை ஓவர் டேக் செய்யும் துளசி.. மகேஷின் காதல் ரூட் கிளியர்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இந்த வாரம் தொடங்கியதில் இருந்து இயக்குனர் முக்கோண காதல் கதைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து இருந்தார்.

கம்பெனியில் நடந்த போட்டி, அதில் ஆனந்தி ஜெயிப்பது என சுவாரசியமாக இருந்தது.

ஆனந்தி போட்டியில் ஜெயித்த அடுத்த நிமிஷம் மீண்டும் முக்கோண காதல் காதலை ஆரம்பித்து விடுவார்களோ என்ற சலிப்பு இருந்தது.

ஆனந்தியை ஓவர் டேக் செய்யும் துளசி

ஆனால் அடுத்த வார கதைக்காக இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் லீட் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

ஆனந்தி அன்பு காதலிப்பது, ஆனந்தியிடம் காதலை சொல்ல மகேஷ் துடிப்பது என பார்க்கவே கொஞ்சம் போராகத்தான் இருக்கும்.

அதனால் தான் துளசியை களம் இறக்க இருக்கிறார்கள். நேற்றைய எபிசோடில் ஆனந்தி அன்புவிடம் நாம் இருவரும் காதலிப்பதை எப்படியாவது மகேஷ் கிட்ட சொல்லிடுங்க.

அக்கா கல்யாணம் முடிஞ்சதும் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறாள். அன்பும் இது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்கிறான்.

வீட்டிற்கு வந்த அன்புக்கு பெரிய ஆப்பு ஒன்று காத்திருக்கிறது. துளசியின் அப்பா அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

அவர்களைப் பார்த்ததுமே அன்புவுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்க மட்டும்தான் வந்து இருக்கீங்களா இல்ல துளசியும் வந்திருக்காளா என அன்பு கேட்பதோடு நேற்றைய எபிசோடு முடிந்து விட்டது.

இன்று வெளியான ப்ரோமோவில் அன்பு அவனுடைய அம்மாவிடம் எதற்காக அத்தை மாமா வந்திருக்காங்க என கேட்கிறான்.

அதற்கு அவன் அம்மா எல்லாமே கல்யாண விஷயத்தை பற்றி பேச தான் என்று சொல்கிறார். இயக்குனர் கொடுத்திருக்கும் ஹிண்ட்டை பார்க்கும் போது அடுத்த வாரத்தில் துளசியின் என்ட்ரி இருக்கும்.

அன்புக்கு மட்டும் தான் பிரச்சனை என்று சொல்லி விட முடியாது. அன்புவை பார்த்துவிட்டு ஹாஸ்டல் ரூமுக்கு வந்த ஆனந்திக்கு மகேஷ் போன் பண்ணுகிறான்.

ஆனந்தி இடம் அவன் காதலை சொல்லுவது போல் இந்த புரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.

அடுத்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுகளுக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Trending News