வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Singapenne: ஆனந்தியிடம் உண்மையை சொல்ல போகும் அன்பு.. ஆட்டத்தை கலைக்க ரெடியான மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியல் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த வார எபிசோடில் இருந்தே சீரியலை பார்க்கும் நேயர்களுக்கு ரத்த கொதிப்பு வரும் அளவிற்கு திகிலை கிளப்பிக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.

ஆனந்தி கோவிலுக்கு விளக்கேற்ற போகும்போது, அங்கு வருவது போல் அமைக்கப்பட்ட காட்சியிலிருந்து அன்பு எப்போ நான் தான் அழகன் என்று சொல்லப் போகிறான் என பெரிய எதிர்பார்ப்பு வந்து விட்டது. அன்பு அதற்கடுத்து ஹாஸ்டலுக்கு சென்று ஆனந்தியை பார்க்க காத்துக் கொண்டிருக்கும் போது இன்னைக்கு முடிஞ்சது கச்சேரி என்றுதான் எல்லோரும் நினைத்தோம்.

ஆனால் இதே லைனை இந்த வாரமும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்பு ஆபீசில் ஆனந்தியை பார்த்து அழகனை பற்றி பேச வேண்டும் என்று திட்டமிடுகிறான். அதே நேரத்தில் நான்தான் ஆனந்தியை போய் பார்த்து, நான் தான் அழகு என்று சொல்லியும் நீ என்னை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறாய் என்று காதல் சோகம் முகத்தில் ததும்பும் அளவுக்கு பேசி நடிக்கிறான்.

அன்பு எப்படியோ ஆனந்தியே சந்தித்து அழகனை பற்றி பேச முயற்சிக்கிறான். ஆனால் ஆனந்தி வழக்கம் போல அன்புவின் மீது எரிந்து விழுகிறாள். அழகனை பற்றி எதுவுமே நீ என்னிடம் பேச தேவை கிடையாது என கடுகடுத்து பேசுகிறாள்.

ஆட்டத்தை கலைக்க ரெடியான மகேஷ்

ஆனால் இந்த வாரத்தில் எப்படியோ அன்பு, அழகனை பற்றி ஆனந்தியிடம் பேசுவது போல் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் மகேஷின் அப்பா அம்மா கல்யாண நாளை அவன் பெரிய அளவில் கொண்டாட திட்டமிடுகிறான்.

அந்தப் பார்ட்டியில் ஆனந்தியை எனக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்று அப்பா அம்மாவிடம் கேட்பதற்கும் திட்டமிட்டு வைத்து விட்டான். ஆனால் இந்த திட்டத்தை சொல்லக்கூடாத ஆளான மித்ராவிடம் சொல்லி விடுகிறான்.

ஒரு பக்கம் அன்பு நான் தான் அழகன் என்று ஆனந்தியிடம் தெரியப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அதே நேரத்தில் அந்த அவன் தான் அழகன் என்று ஆனந்தியை நம்ப வைக்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்.

இதற்கு இடையில் மகேஷ் கல்யாணம் வரைக்கும் பிளான் போட்டு வைத்து விட்டான். இப்ப இந்த பிளான் மித்ரா எப்படி முறியடிக்க போகிறாள், ஆனந்தி யாரை அழகன் என்று நம்ப போகிறாள் என்பதுதான் இந்த வாரத்தின் ஹைலைட்.

Trending News