Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் தற்போது இப்போது அன்புவின் நிலைமை ஆகிவிட்டது.
ஆனந்தி அவனுடைய பேச்சை கேட்காமல் பிறந்தநாள் விழாவுக்கு போனதில் இருந்தே அன்புக்கு நிம்மதி இல்லை.
மகேஷ் ஆனந்தி இன்னும் அழகனை தான் காதலிக்கிறாள் என்று தவறாக நினைத்து கொண்டிருக்கிறான்.
மகேஷுக்காக ஆனந்தியிடம் தூது போகும் அன்பு
இதனால் மீண்டும் அன்புவிடம் ஆனந்தியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு உதவி கேட்கிறான்.
ஆனந்தியின் ஹாஸ்டல் தோழிகள் அவளிடம் இவ்வளவு பெரிய பணக்கார வாழ்க்கையை விட்டு விடாதே என்று அறிவுரை கூறுகிறார்கள்.
ஹாஸ்டல் வார்டனும் இது உனக்கு கிடைத்த நல்ல வாழ்க்கை மிஸ் பண்ணி விடாதே என அவள் மண்டையை கழுவுகிறார்.
இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மகேஷ், அன்புவிடம் ஆனந்தியை மொட்டை மாடிக்கு அழைத்து வர சொல்கிறான்.
அன்புவும் ஆனந்தியை மாடிக்கு அனுப்புகிறான். அங்கே மகேஷ் ஆனந்தியிடம் தன் காதலை ஏற்று கொள்ளுமாறு கெஞ்சுகிறான்.
இதற்கு ஆனந்தி என்ன பதில் சொல்கிறாள் என இன்றைய எபிசோடில் பொறுத்திருந்து பார்க்கலாம்.