Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் முழுக்க காதல் போராட்டமாக இருக்கப் போகிறது. கடந்த சில வாரங்களாகவே ஆனந்தியின் சொந்த ஊர் மற்றும் அங்கு அவள் குடும்பத்திற்கு ஏற்பட்ட ஆபத்து என திகில் நிறைந்ததாக இருந்தது.
இந்த வாரம் முடிவிலேயே மகேஷ் அன்பு இடம் தான் ஆனந்தியை காதலிப்பதாகவும், ஆனந்தி இல்லை என்றால் நான் செத்தே போய் விடுவேன் என்றும் சொல்கிறான். நான் தான் அழகு என்று எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று இருந்த அன்புக்கு இது பேரிடியாக அமைந்தது.
அன்பு மற்றும் மகேஷ் கம்பெனியில் இல்லாத நேரத்தை கருணாகரன் தனக்காக சாதகமாக பயன்படுத்திக் கொண்டான். தில்லைநாதனிடம் ஆனந்திக்காக மகேஷ் தன்னை ஒதுக்குவது மற்றும் அன்பு விடம் ப்ரொடக்ஷன் பொறுப்பை ஒப்படைத்தது என எக்கச்சக்கத்திற்கும் போட்டு கொடுக்கிறான்.
இதனால் மகேஷ் அப்பா தில்லைநாதன் மிகவும் கோபமடைகிறார். அவர் அந்த கோபத்தில் இருப்பது தெரியாமல் மகேஷ் அவருக்கு போன் செய்து பேசுகிறான். ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் திருமணத்தைப் பற்றி பேசப் போவதாக சொல்கிறான்.
மகேசுக்காக காதலை தியாகம் செய்யும் அன்பு?
ஏற்கனவே கோபத்தில் இருக்கும் தில்லைநாதன் மகேஷிடம் கோபப்படுவதோடு, அவனுடைய முயற்சிக்கும் முட்டுக்கட்டையாகிறார். ஒரு வழியாக ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் எதுவுமே சொல்லாமல் சென்னை வந்து விடுவது போல் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோ காட்டப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் ஆனந்தி நந்தா விஷயத்தில் இருந்து, அழகனை மறந்து விட்டது போல் இவ்வளவு நாள் காட்டப்பட்டது. ஆனந்தி மற்றும் அன்பு குடோனுக்குள் மாட்டியிருந்தபோது அன்பு அவளிடம் தனக்கு அழகன் யார் என்று தெரியும் என சொல்லி இருந்தான்.
சென்னை வந்ததும் ஆனந்தி முதல் வேலையாக அன்பு விடம் உங்களுக்கு அழகன் யார் என்று தெரியும் என்று என்கிட்ட சொன்னீங்க, அவர் யார் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறாள். தானாகவே முன்வந்து நான் தான் அழகன் என்று சொல்ல வேண்டிய அன்புவை ஏற்கனவே மகேஷ் தன்னுடைய காதலை பற்றி சொல்லி தடுத்து விட்டான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆனந்தியே வாயை திறந்து அழகன் யார் என கேட்கும் போது அன்பு வின் பதில் என்னவாக இருக்கும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. மகேஷுடன் இருக்கும் நீண்ட கால நட்புக்காக அன்பு தன்னுடைய காதலை தியாகம் செய்து விடுவானோ என்ற ஏக்கம் சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு இருக்கிறது.
சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- அன்பு வாழ்க்கையை புரட்டி போட்ட 2 சம்பவங்கள்
- சிங்கப்பெண்ணில் போட்ட திட்டத்தை நிறைவேற்ற போகும் சுயம்புலிங்கம், மித்ரா
- சிங்கப்பெண்ணில் காதல் ஆட்டத்தில் இருந்து விலகும் மகேஷ், ஆபத்தை நெருங்கும் ஆனந்தி
- சிங்கப்பெண்ணில் ஆனந்திக்கு ஏற்பட போகும் அசிங்கம்