வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிங்கப்பெண்ணில், மித்ராவிடம் மொத்த கதையும் சொன்ன அன்பு.. கதறி அழும் ஆனந்தி, அழகன் இனி இல்லை

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. சீரியலின் ஹீரோ அன்புக்காக மட்டும் தான் பலரும் இந்த சீரியலை பார்த்து வந்தார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அன்புவை இயக்குனர் காட்டும் விதம் எல்லோருக்குமே அதிருப்தியை தான் கொடுத்திருக்கிறது.

நான் தான் அழகன் என்று ஆனந்தியிடம் உண்மையை சொல்லி அன்பு ஆனந்தியை சேர வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசை. ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் இயக்குனர் அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே வருகிறார்.

அன்பு தான் அழகன் என்று தெரிந்ததும் ஆனந்தி என்ன முடிவெடுக்கப் போகிறாள், மகேஷ் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறான் என்பது போல் இந்த கதை நகர்ந்தால் நன்றாகவே இருக்கும். ஆனால் அன்பு ஆனந்தியை விட்டு ஒதுங்குவது போல் காட்டப்பட்டு இருப்பதால் இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.

மித்ராவிடம் மொத்த கதையும் சொன்ன அன்பு

ஆனந்தியை விட்டு விலக நினைக்கும் அன்பு நேற்று தன்னுடைய அம்மாவிடம் நான் கம்பெனி வேலையில் இருந்து நிற்கப் போகிறேன் என சொல்லி இருந்தான். அது மட்டும் இல்லாமல் அன்பு முதல் முறையாக தன்னிடம் கோபப்பட்டு பேசியதை ஆனந்தியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அன்பு விடம் வந்து கதறி அழுகிறாள். இந்த விஷயத்தையும் அன்பு வாழ் தாங்கக்கூடிய மனநிலை இல்லை கம்பெனியில் இருந்தால் தானே இதை எல்லாம் கவனிக்க வேண்டியது வரும் என இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறான்.

அன்பு இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்புவை நினைத்து ஆனந்தி ரொம்பவும் கவலையுடன் இருக்கிறாள். அதே நேரத்தில் கம்பெனிக்கு வரும் அன்பு மித்ராவிடம் ஏதோ வாய் கொடுக்க மித்ரா நீ லேட்டாக வந்த நான் வேலையை விட்டு நிப்பாட்டிடுவேன் என்று சொல்கிறாள்.

அதற்கு அன்பு நானே வேலையை விட்டு நிற்பதை சொல்லத்தான் வந்திருக்கிறேன் என சொல்கிறான். இது மித்ராவுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. கையோடு ராஜினாமா கடிதத்தையும் எடுத்து வந்திருக்கிறான். இந்த விஷயம் ஆனந்திக்கு தெரிந்தால் அவள் இதில் எந்த மாதிரியான முடிவை எடுப்பாள் என தெரியவில்லை.

அன்பு உண்மையிலேயே கம்பெனியை விட்டு போய்விட்டால் அடுத்தடுத்து சிங்க பெண்ணே சீரியல் எப்படி நகரும் என்பது சந்தேகம்தான். ஒரு வேலை அன்பு ராஜினாமா செய்து வெளியே போகப் போகிறான் என தெரிந்து மகேஷ் உள்ளே வந்து பேசுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அன்பு கம்பெனியை விட்டு போகிறானா இல்லை மீண்டும் ஆனந்தியுடன் நட்பாக பழகுகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News