புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கண்ணுக்கு தெரிஞ்சது அன்புள்ள ரஜினிகாந்த் மட்டும்தான்.. 6 ஹீரோக்களுடன் குழந்தையாக நடித்த மீனா

Meena who acted as a child with 6 heroes: நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் பயணத்தை தொடங்கி பல முன்னணி ஹீரோவுக்கு ஜோடி போட்டு நடித்து வெற்றி நாயகியாக ஜொலித்திருக்கிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட சினிமாவிற்குள் நுழைந்து 40 வருடங்களையும் தாண்டி இருக்கிறார். இதை கொண்டாடும் வகையில் திரையுலகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கடந்தாண்டு மீனா 40 என்ற நிகழ்ச்சியை நடத்தி அவருடைய நடிப்பை கௌரவித்திருந்தார்கள்.

அந்த வகையில் இப்பொழுது வரை மறக்க முடியாத ஒரு நடிகையாகவும், இவருடைய நடிப்பை மீண்டும் திரையுலகில் பார்க்க வேண்டும் என்று ஏங்க கூடிய அளவிற்கு மீனா ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். அப்படிப்பட்டவர் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களில் குழந்தையாகவும் நடித்து அதே ஹீரோக்களுடன் வளர்ந்த பின் ஜோடி போட்டும் நடித்திருக்கிறார். அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவின் படங்கள்

மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது முதலில் அன்புள்ள ரஜினிகாந்த் படம் தான். இப்படத்தில் குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் சின்ன வயது மீனாவை ரஜினிகாந்த் அவ்வப்போது சந்தித்து ஒரு கலகலப்பாக இருக்கும் குழந்தையாக மாற்ற முயற்சி எடுக்கும் விதமாக கதை இருக்கும். ஆனால் வளர்ந்த பின் ரஜினிக்கு ஜோடியாக எஜமான், முத்து, வீரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்

கமல் படத்திலும் சின்ன குழந்தையாக மீனா நடித்திருக்கிறார். அதாவது 1984 ஆம் ஆண்டு வெளிவந்த யாத்கர் என்னும் இந்தி படத்தில் கமல் மற்றும் பூனம் தில்லான் நடித்திருக்கிறார்கள். இது ஹிந்தி படம் என்பதால் பெரிய அளவில் நமக்கு யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. அத்துடன் கமலுக்கு ஜோடியாக அவ்வை சண்முகி படத்தில் நடித்திருக்கிறார்.

அடுத்ததாக சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த கூனி என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். அதன் பின் தாய் மாமன், மாமன் மகள், வள்ளல், ஆளுக்கு ஒரு ஆசை போன்ற படங்களில் ஜோடியாகவும் மீனா கலக்கி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் மற்றும் பிரபு நடிப்பில் வெளிவந்த சுமங்கலி மற்றும் திருப்பங்கள் என்ற இரண்டு படத்தில் மீனா குழந்தையாக நடித்திருக்கிறார். அடுத்து வளர்ந்து பெரிய நடிகையாக மாறிய பின் ராஜ்குமரன் படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

அடுத்ததாக பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த டிஸ்கோ படத்திலும் குழந்தையாக நடித்திருக்கிறார். அதன் பின் ஜோடியாக நான்கு படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன், ஒரு கொச்சுகத ஆறும் பேசாத கதை என்ற படத்திலும் மீனா குழந்தையாக நடித்திருக்கிறார். அதன் பின்னர் ஜோடியாக மூன்று படங்களிலும் நடித்திருக்கிறார்.

இப்படி குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்த படங்கள் ஏராளமாக இருந்தாலும் 6 முன்னணி ஹீரோக்களுடன் குழந்தையாக நடித்திருக்கிறார். பின்பு அவர்களுக்கு ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.

மீனாவை பற்றி கிளம்பிய சர்ச்சை

Trending News