புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தனுஷிடம் நாசுக்காக பிட்டு போட்ட டிடி.. விவாகரத்துக்குப் பின்னும் இந்த குறும்பு தேவைதானா

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் உச்ச நட்சத்திரங்களை பேட்டி எடுப்பதும் டிடி தான். இதனால் சினிமா பிரபலங்களுடன் டிடி எப்போதுமே நெருங்கி பழகி வரக்கூடியவர்.

சமீபத்தில் நயன்தாராவின் திருமணத்தில் கூட பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் டிடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவியது. இந்நிலையில் தனுஷ் மற்றும் டிடி இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தனுஷ் ஹாலிவுட்டில் தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தி கிரே மேன் படத்தில் பிரிட்ஜெர்டன் வெப்சீரிஸ் நாயகனும் நடித்துள்ளார்.

அந்த விழாவில் தனுஷின் அருகில் அவரும் அமர்ந்திருந்தார். இந்நிலையில் டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.

அதில் தனுஷை புகழ்ந்து சில விஷயங்களையும் பகிர்ந்து இருந்தார். அதாவது உங்கள் திறமையை நிரூபித்து விட்டீர்கள், அமெரிக்காவில் மாஸ் பண்றீங்க என நாசுக்காக பிட்டு போட்டு, தனுஷ் அருகில் உள்ள பிரிட்ஜெர்டன் ஹீரோ வாட்ஸ்அப் நம்பர் கிடைக்குமா என கேட்டுள்ளார்.

ஏற்கனவே ஷாருக்கானை கட்டிபிடித்த புகைப்படம் சர்ச்சைக்குள்ளான நிலையில் சமீபத்தில் ஆலியா பட் கணவர் ரன்பீர் கபூர் உடன் நெருக்கமான செல்பி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய டிடி இவ்வாறு கேட்டியிருப்பதை பார்த்த பலரும் விவாகரத்துக்குப் பின்பும் இந்த குறும்பு தேவைதானா என விமர்சித்து வருகிறார்கள்.

Trending News