சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

வசூலில் மாஸ் காட்டும் பிரசாந்த்.. 3வது நாளில் கோடிகளை குவித்த கலெக்ஷன் ரிப்போர்ட்

Andhagan Collection: விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இப்போது ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களை காட்டிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய சொந்த பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

ஆனாலும் ரீ என்ட்ரி கொடுத்து சில படங்களில் நடித்து வந்த நிலையில் பெரிய அளவில் அந்த படகங்கள் கை கொடுக்காமல் போய்விட்டது. இருந்த போதும் விடாமுயற்சியால் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரசாந்துக்கு அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் பார்வையற்ற பியானோ கலைஞர் ஆகாஷாக பிரசாந்த் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் முதல் நாளில் கிட்டத்தட்ட 60 லட்சத்திற்கும் அதிகமாக கலெக்ஷன் செய்திருந்தது.

அந்தகன் மூன்றாவது நாள் கலெக்ஷன்

இதைத் தொடர்ந்து படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் கோடிகளில் வசூலை குவிக்க ஆரம்பித்தது. அதன்படி சனிக்கிழமை இரண்டாவது நாளில் 1.10 கோடி கலெக்ஷன் செய்திருந்தது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசூல் இன்னும் சற்று அதிகரித்த 1.15 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. இதுவரை வெளியான படங்களில் பிரசாந்துக்கு நல்ல ஓபனிங் கொடுக்கும் படமாக அந்தகன் படம் அமைந்துள்ளது. அதோடு வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் சில காரணங்களினால் அப்போது பிரசாந்தால் தொடர்ந்து சினிமாவில் செயல்பட முடியாமல் போய் உள்ளது. ஆனால் அந்தகன் படத்தின் ரீ என்ட்ரி காரணமாக கண்டிப்பாக மீண்டும் விட்ட இடத்தை பிரஷாந்த் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது ‌

ரீ என்ட்ரியில் மாஸ் காட்டும் பிரசாந்த்

Trending News