Annimal 2nd day collection: தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்திப் வங்கா ரெட்டி ரன்பீர் கபூரை வைத்து இயக்கிய அனிமல் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆனது. தென்னிந்திய சினிமா ரசிகர்கள் இடையே இந்த படத்திற்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பு இல்லை என்றாலும் பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.
அப்பா மீது இருக்கும் அதீத அன்பால் மகன் மிருகமாக மாறுவதுதான் இந்த படத்தின் கதை. 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடும் இந்த படம் எப்படி வெற்றியடைய போகிறது என எல்லோருக்குமே சந்தேகம் இருந்தது. அதை எல்லாம் தாண்டி அனிமல் படம் முதல் நாளிலேயே 100 கோடி கிளப்பில் சேர்ந்தது. வெள்ளிக்கிழமை அன்று அனிமல் 116 கோடி வசூல் செய்திருக்கிறது.
Also Read:3.21 மணி நேரம் பிளேடு போட்ட அனிமல் கல்லா கட்டியதா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
பாலிவுட் சினிமா உலகின் சாக்லேட் பாயாக சுற்றிக் கொண்டிருந்த ரன்பீர் கபூர் இந்த படத்தில் முதல் முறையாக கேங்ஸ்டர் ரோலில் நடித்து இருக்கிறார். படத்தின் மொத்த கதையையும் தன் தோள் மீது சுமந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு நிறைய பிரபலங்கள் பாராட்டுகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.
இந்தி திரை உலகை உலுக்கிய வசூல்
அனிமல் படத்திற்கு தணிக்கை குழுவினரால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும் தியேட்டருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து கொண்டிருக்கிறது. அப்பா மற்றும் மகனுக்கு இடையே நடக்கும் கதை களத்தில் எதற்காக இப்படி ஒரு வன்முறை காட்சிகளை வைக்க வேண்டும் என்பது தென்னிந்திய சினிமா ரசிகர்களின் நெகட்டிவ் விமர்சனமாக இருக்கிறது.
தமிழில் அதே தினத்தில் நயன்தாராவின் அன்னபூரணி படம் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் அனிமல் படம் சுத்தமாக அடி வாங்கிவிட்டது. இந்தியா முழுக்க நல்ல ரெஸ்பான்ஸ் படத்திற்கு கிடைத்திருக்கும் நிலையில் இரண்டாம் நாள் வசூல் ஒட்டு மொத்த இந்தி சினிமா உலகில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அனிமல் படத்தின் இரண்டாம் நாள் வசூலை தயாரிப்பு குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. முதல் நாளில் 116 கோடி வசூலித்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று இந்த படம் 236 கோடி வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திருக்கிறது அடுத்தடுத்து இந்த படம் 500 கோடி வசூலிலும் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read:3.21 மணி நேரம் பிளேடு போட்ட அனிமல் கல்லா கட்டியதா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்