திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிறுபிள்ளைத்தனமாக மூஞ்சை காட்டும் விராட் கோலி.. சௌரவ் கங்குலி கொடுத்த பெரிய தண்டனை

ஆரம்பத்தில் இருந்தே சௌரவ் கங்குலி மட்டும் விராட் கோலி இருவருக்கும் இடையே பணி போர் நடந்து வருகிறது. இந்த பணி போர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டி முடிந்த பிறகு, கங்குலியும், விராட் கோலியும் கை கொடுத்து கொள்ளாமல் போனார்கள்.

விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி நடத்தும் டிராபியை வென்றதே இல்லை. இது ஆரம்பத்தில் இருந்து சௌரவ் கங்குலிக்கு ஒரு உறுத்தலை ஏற்படுத்தி இருந்தது. அதனால் கோலியை இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியவர் கங்குலி.

Also Read: அதல பாதாளத்துக்கு தள்ளப்படும் இந்திய அணி.. 20 ஓவர் போட்டிகளுக்கு ஆப்பு அடிக்கும் ஹார்திக் பாண்டியா

விராட் கோலிக்கு முன்னர் தோனி தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு நிறைய ஐசிசி கோப்பையை வென்றுள்ளது. ஆனால் அவரே கேப்டன் பதவியை ராஜினாமா செய்து மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்போது விராட் கோலி தானாகவே கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டு அணிவீரராக விளையாட வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் சௌரவ் கங்குலி.

அதன்படி விராட் கோலி கேப்டன் பதவியை பறித்துவிட்டு ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்தனர். அப்போது இருந்தே சௌரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இருவரும் சரியாக பேசிக் கொள்வதும் கிடையாது. இப்படி இவர்களுக்குள் பல பிரச்சனைகள் நிலவி வந்தது.

Also Read: இந்திய அணியை கெடுத்து குட்டி சுவராக்கிய 5 செலக்டர்ஸ்.. கோலிக்கு ஜால்ரா போடும் தகுதியே இல்லாத ராஜாங்கம்

இப்படி பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கும் போது கங்குலி நடுநிலைமையோடு செயல்படும் பயிற்சியாளர் வேண்டுமென இந்திய அணியின் சுவர் ராகுல் டிராவிட்டை பரிந்துரைத்தார். டிராவிட்க்கு விருப்பம் இல்லாத போதிலும் அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக கொண்டு வந்து விராட் கோலியின் கொட்டத்தை அடக்க நினைத்தார் சௌரவ் கங்குலி .

இதுதான் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை. என்ன தான் பல பிரச்சினைகள் இருந்தாலும் ஒரு பொதுவெளியில் இந்திய சீனியர் வீரரை, விராட் கோலி அவமதித்தது பெரிய தப்பு என்று முன்னாள் வீரர்கள் விளாசி வருகின்றனர்.. இதற்கு உண்டான விளக்கத்தை விராட் கோலி தரப்பிலிருந்து கொடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

Also Read: கிடைத்த வாய்ப்பும் பறிபோனது.. இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்ட சஞ்சு சாம்சன்

Trending News