படைப்பாளிகள் என்ற பெயர் சாதாரணமாக யாருக்கும் வருவதில்லை. மக்கள் கொண்டாடப்படும் படங்களை எடுத்தால் மட்டுமே ஒருவருக்கு படைப்பாளி என்ற பெயர் வரும். சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தில் பல தில்லாலங்கடி வேலைகள் நடந்துள்ளது. இதனை எல்லாம் அறியாத மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் லியோ படத்தை நம்பி மோசம்போய் உள்ளனர்.
இலட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அனிருத், இந்த படத்தில் போட்ட பாடல் ஒன்றுதான் இப்பொழுது சர்ச்சையை கிளப்பி உள்ளது. “அண்ணன் வரவா” பாடல் அப்படியே ஒரு ஆல்பத்தில் இருந்து அட்டை காப்பி அடித்த படலாம். இப்படி காப்பியடிப்பது எல்லாம் அனிருத்துக்கு புதிதல்ல.
அனிருத் ஏற்கனவே “கோலமாவு கோகிலா” படத்தில் “கல்யாண வயசு” என்ற பாடலின் இசையை வேறு ஒரு ஆல்பத்திலிருந்து காப்பியடித்துள்ளார்.இதனை எதிர்த்து அந்த ஆல்பத்துக்கு உரிமையுடையவர்கள் பிரச்சனை செய்தனர். அதன் பின்னர் அந்த பிரச்சனை சமரசம் செய்யப்பட்டது. உடனே அந்த பாடல் youtube வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
அனிருத் தான் இப்படி செய்தார் என்றால், லோகேஷ் அவரை விட ஒரு படி மேலே சென்று விட்டார். ஏற்கனவே இந்த படம் “ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்” என்ற படத்தில் தழுவல் தான் என்று கூறியிருந்தார். அது ஒரு புறம் இருக்க பட டைட்டில் கார்டில் அந்த நிறுவனத்துக்கு நன்றி கூட தெரிவித்தார்.
“ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்” ஒரு கொரியன் படம். லோகேஷ் கனகராஜ் அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு உரிமையும் பெறவில்லை, இது ஒரு பெரிய தவறாகும், அந்த நிறுவனம் இவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தால் இவர் ஒரு பெருந்தொகையை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டிய நிலைமை வந்துவிடும்.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இப்பொழுது எதை வேண்டுமானாலும் செய்கின்றனர்,இதற்கு அனிருத்தம், லோகேஷும் நல்ல ஒரு எடுத்துக்காட்டு. சீக்கிரமாக உச்சம் தொட வேண்டும் என்பதற்காக பக்குவமாக சேர்மானங்கள் சேர்த்து செய்யும் இட்லியை நம்பாமல் இன்ஸ்டன்ட் நூடுல்சை கொடுத்து எல்லாத்தையும் கெடுத்து வருகின்றனர்.