Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

ஒரே நாளில் இரண்டு திருமணங்கள்.. அனிருத்தை மிஞ்சிய ப்ரியா பவானி சங்கர்

ஒரே நாளில் இரண்டு திருமணங்கள்.. அனிருத்தை மிஞ்சிய ப்ரியா பவானி சங்கர்

ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவும் கிரீஸில் நடைபெற்ற அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், எந்தவித சத்தமும் இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்ற பிரியா பவானி சங்கரின் திருமணம்தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தனது 14 ஆண்டுகால காதலரான ராஜ்வேல் ராஜை பிரியா பவானி சங்கர் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். சென்னையில் ECR பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.

ஒருபுறம் மிகப்பெரிய குடும்பப் பின்னணி, வெளிநாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங், பிரம்மாண்டமான ஏற்பாடுகள், ஆடம்பரமான ஆடை அலங்காரங்கள் என அனிருத்தின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்களும் இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இத்தனை பிரம்மாண்டங்களுக்கு மத்தியில், மறுபுறம் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி எளிமையாக நடைபெற்ற பிரியா பவானி சங்கரின் திருமணம்தான் பலரது மனதையும் கவர்ந்திருக்கிறது.

இதனால், அனிருத்தின் பிரம்மாண்டத் திருமணத்தைவிட பிரியா பவானி சங்கரின் எளிமையான திருமணம்தான் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.