சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

அலட்சியம் காட்டிய அனிருத்.. பெரும் சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விக்னேஷ் சிவன்

தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்களும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் கொடுக்கும் அமோக வரவேற்பினால் அங்குள்ள திரையரங்கில் திரையிடப்படுவது வழக்கமாக உள்ளது. அப்படி ஒரு படத்தை எஃப் எம் எஸ் எனப்படும் வெளிநாடுகளுக்கு அனுப்பும் வினியோகஸ்தர்கள் அதை ஒரு வாரத்திற்கு முன்னாடியே அனுப்ப வேண்டும்.

ஏனென்றால் அந்த படத்தை அங்கேயும் சென்சார் செய்வார்கள். இப்பொழுது அப்படி ஒரு படத்தை வெளிநாட்டுக்கு அனுப்பவே இல்லை. அதனால் படம் வெளிநாடுகளில் எல்லா தியேட்டர்களிலும் கேன்சல் ஆகிவருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கி தயாரித்து விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்திருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படமானது நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை வெளிநாட்டிற்கு அனுப்ப வில்லையாம். அதனால் வெளிநாடுகளில் இந்த படம் கேன்சல் ஆகியது. இதற்கு காரணம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’  படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தான் என்று கூறுகிறார்கள்.

கடைசி நேரம் வரை பாட்டிற்காக அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என இழுத்தடித்து விட்டு கடைசியில் தான் ரெடி பண்ணி கொடுத்தாராம். அனிருத் தற்சமயம் வெளியாகிக் கொண்டிருக்கும் அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கும் இசை அமைப்பதால் கொஞ்சம் பிஸியாகவே இருக்கிறார்.

எனவே அனிருத்தின் அலட்சியத்தால் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’  படமானது வெளிநாடுகளில் உள்ள திரையரங்கில் ரிலீசாகாமல் அங்கிருக்கும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News