வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அம்மாடியோ ஒரு காஃபியோட விலையே இவ்வளவா.! இசையை தாண்டி ஹோட்டல் தொழில் கல்லா கட்டும் அனிருத்தின் வருமானம்

Aniruth’s Income: இப்போது பிசியாக இருக்கும் இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் யோசிக்கவே வேண்டியது இல்லை. அனிருத் என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அவர் கைநிறைய படங்களை வைத்துக் கொண்டு நிற்க நேரமில்லாமல் பிசியாக இருக்கிறார்.

ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கதையாக ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் அவரை இப்போது புகழின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. இவர் இல்லாமல் எந்த படங்களும் கிடையாது என்னும் அளவுக்கு டாப் ஹீரோக்களின் செல்லப் பிள்ளையாகவும் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் விடாமுயற்சி, வேட்டையன், இந்தியன் 2, தலைவர் 171 என இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. இதன் மூலம் அவர் கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்குகிறார். அதன்படி அனிருத் ஒரு படத்திற்காக 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

Also read: லோகேஷ், அனிருத்துக்கு வலை விரிக்கும் நடிகர்.. தும்பை விட்டு வாலை பிடிக்கும் சாக்லேட் பாய்

இது பத்தாது என்று இசைக்கச்சேரி மூலமும் அவருக்கு நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் சென்னையில் இவர் நடத்திவரும் ஹோட்டல் தொழிலும் லாபகரமாக சென்று கொண்டிருக்கிறதாம். அந்த வகையில் அனிருத் தன் நண்பர்களுடன் இணைந்து தி சம்மர் ஹவுஸ் ஈட்டறி(The Summer House Eatery) என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.

இந்த ஹோட்டலில் சாதாரண காஃபியின் விலையே 30 ரூபாயாம். அதில் தொடங்கி அதிகபட்ச விலை வரை காஃபிகள் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் சூப் வகைகளின் ஆரம்ப விலையே 200 ரூபாய். மேலும் லெமன் டீ நூறு ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

அதை தொடர்ந்து பாஸ்தா, கேக் போன்ற வகைகளும் 300 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. இப்படியாக அந்த ஹோட்டலில் கிடைக்கும் உணவு பொருட்களின் விலை தலையை சுற்ற வைக்கிறது. இதன் மூலம் அனிருத் லட்சக்கணக்கில் கல்லா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: பல நூறு கோடி சம்பளம், அனிருத்தின் அடுத்தடுத்த வெளிவர உள்ள 13 படங்கள்.. 2024-25 கிங் மேக்கர் நான்தான்

Trending News