GV Prakash and Aniruth: பெரிய நடிகர்களின் படங்கள் மக்களிடம் ஈசியாக ரீச் ஆகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அனிருத் என்றே சொல்லலாம். ஏனென்றால் இவர் இசையமைக்கும் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி என்று எல்லா பக்கமும் பறந்து அதை கொண்டாடுகிறார்கள்.
இதனாலையே படம் ரிலீசுக்கு முன்னாடி அப்படத்தின் பாடல்களை வெளியிட்டு படத்தின் மீது ஒரு ஹைப்பை ஏற்படுத்திவிட முடிகிறது. இப்படி உச்ச நட்சத்திரங்களின் ராக்ஸ்டார் ஆக ஜொலித்து வரும் அனிருத் தனக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து கொஞ்சம் ஓவராக ஆட்டம் போட ஆரம்பித்து விட்டார்.
அதாவது இயக்குனர்கள் இவரிடம் வேலை கொடுத்தால் அதை முடித்துக் கொடுக்க ரொம்ப நாட்களாக இழுத்தடிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் பாடல்களை கம்போஸ் பண்ணவே தாமதமாக ஆக்குகிறார். இதனால் இவருக்கு வேலை மீது டெடிகேஷன் இல்லை என்று இயக்குனர்களுக்கு தோன்றுகிறது.
கமுக்கமாக காரியத்தை சாதிக்கும் சுள்ளான்
அதனால் இன்னும் இவரை பிடித்து தொங்கிக்கிட்டு இருக்கக் கூடாது என்று அனிருத்தை கமிட் பண்ணியவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஜிவி பிரகாஷிடம் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். ஜிவி பிரகாஷ் ஒரு பக்கம் நடிப்பின் நாயகனாக கவனம் செலுத்தி வருகிறார்.
இன்னொரு பக்கம் இசை தான் என்னுடைய உயிர் மூச்சு என்பதற்கு ஏற்ப கமிட்டான படங்களில் ஒவ்வொன்றாக கட்டம் தீட்டி அழகாக மெட்டு போட்டும் கொடுக்கிறார். அந்த வகையில் ஓவராக ஆட்டம் போட்ட அனிருத்துக்கு ஆப்பு வைக்கும் விதமாக தற்போது ஜிவி பிரகாஷிடம் கிட்டத்தட்ட 16 படங்கள் கைவசம் இருக்கிறது.
அதில் இந்தாண்டு வர இருக்கும் தமிழ் படங்கள் தங்கலான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் தெலுங்கு, ஹிந்தி போன்ற 16 படங்களில் கமிட்டாகி இருக்கிறார். பார்க்க சுள்ளான் மாதிரி இருக்கும் ஜிவி பிரகாஷ் கமுக்கமாக இருந்து காரியத்தை சாதித்து வெற்றி நடை போட்டு வருகிறார்.