Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பிக்பாஸ் அல்மேட்டில் புருஷனை மறந்துட்டீங்களா அனிதா.. வயிற்றில் வளரும் லிட்டில் பிக் பாஸ்!

பிக்பாஸ் அல்மேட்டில் புருஷனை மறந்துட்டீங்களா அனிதா.. வயிற்றில் வளரும் லிட்டில் பிக் பாஸ்!

டிஸ்னி பிளஸ் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்  பிக்பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சி ஆனது ஒரு வாரத்தை கடந்துள்ளது. 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட்டில்  சுரேஷ் சக்கரவர்த்தி கடந்தவாரம் எலிமினேட் ஆனாலும் சுவாரசியம் குறையாமல் மற்ற […]

டிஸ்னி பிளஸ் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்  பிக்பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சி ஆனது ஒரு வாரத்தை கடந்துள்ளது. 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட்டில்  சுரேஷ் சக்கரவர்த்தி கடந்தவாரம் எலிமினேட் ஆனாலும் சுவாரசியம் குறையாமல் மற்ற போட்டியாளர்கள் கலகலப்பு மற்றும் காரசாரமான விவாதத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டிருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் பிறகு தற்போதைய பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டிருக்கும் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு  தரைகுறைவாக பேசியிருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

ஏனென்றால் அனிதா சம்பத் பிக் பாஸ்சை  திருமணம் செய்து கொண்டதாகவும், லிட்டில் பிக் பாஸ் தன்னுடைய வயிற்றில் வளர்வதாகவும் சக போட்டியாளர்களிடம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அனிதா சம்பத்துக்கு திருமணம் ஆன நிலையில், வேறு ஒருவருடன் திருமணமாகி வயிற்றில் குழந்தை வளர்ந்தது என்று பேசியிருப்பது நாகரீகம் ஆனது அல்ல என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விமர்சிக்கின்றனர்.

அத்துடன்  திருமணம் ஆகாமல் இருக்கும் ஜூலி கூட இதுபோன்ற கிண்டலாக  பேசியதில்லை. ஆனால் அனிதா சம்பத் இப்படி நடந்து கொண்டது பலருக்கு  ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கு அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன், இந்த சம்பவத்தை குறித்து கூடிய விரைவில் விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஒருவேளை பிரபாகரன் சீரியசாக எடுத்துக்கொண்டு விவாகரத்து செய்து கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பிரபாகரனை உசுப்பேற்றி விடுகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.