விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் எதிர்பார்க்காத டுவிஸ்ட் அரங்கேறி இருக்கிறது. அதாவது அஞ்சலியை காதலித்து விட்டு குடும்பத்திற்காக பல்லவியை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் அஜய். இதனால் அஞ்சலி விபரீத முடிவு எடுத்திருக்கிறார்.
அதாவது விஷ மருந்துடன் மண்டபத்திற்கு அஞ்சலி வந்துள்ளார். அஜய் ரூமுக்கு சென்று இப்போதே எனக்கு தாலி கட்டு, இல்லைனா நான் செத்துடுவேன் என்று விஷயத்தைக் குடித்து விடுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் அஜய் முழித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்கிறது.
அப்போது அஜய்யின் தங்கை தான் அங்கு வந்திருக்கிறார். விஷயம் தெரிந்த அவர் உடனடியாக அஞ்சலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று காரில் ஏற்றுகின்றனர். அஜய்யும் அந்த காரில் ஏறி செல்கிறார். இதை தூரத்திலிருந்து பல்லவியின் தோழி பார்த்து விடுகிறார்.
மண்டபத்தில் இருந்து வெளியேறிய அஜய்
உடனடியாக மணவறையில் உள்ள பல்லவியிடம் ஓடிவந்து அஜய் வேறு ஒரு பெண்ணுடன் மண்டபத்திலிருந்து ஓடிவிட்டார் என்று சொல்கிறார். இதைக் கேட்டு மண்டபத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் பெண்ணுடைய தந்தையாக மண்டபத்தில் அவமானத்தை சந்திக்கிறார் பல்லவையின் அப்பா.
இந்த திருமணம் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் கண்ணனை பல்லவி திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய உள்ளனர். அப்பாவின் நிலைமை பார்த்து பல்லவியும் வேறு வழியில்லாமல் கண்ணனை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
இதற்கெல்லாம் காரணம் அஜய் தான் என்று அவரது வீட்டு மருமகளாக சென்று பழிவாங்க இருக்கிறார். அஜய்யும் தனக்காக உயிரையே கொடுக்கத் துணிந்த அஞ்சலிக்காக வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவ்வாறு சுவாரசியமான திருப்பங்களுடன் வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் செல்ல உள்ளது.