புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வாயை திறக்காமல் இருக்கும் அண்ணாச்சி.. வரிஞ்சி கட்டிக்கிட்டு வரும் பிரபலங்கள்

‘தி லெஜெண்ட்’ திரைப்படத்திற்கு பிறகு அந்த படத்தின் ஹீரோ அருள் சரவணன் அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டதாகவும், கதைகளை கேட்டு கொண்டிருப்பதாகவும், மேலும் இந்த படத்தையும் அவரே தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இயக்குனர் JD ஜெர்ரி இயக்கத்தில் சரவண அருள், விவேக், ஊர்வசி ரத்துல்லா, கீத்திகா திவாரி, நடித்த திரைப்படம் தி லெஜெண்ட. இந்த படத்தை சரவணனே தயாரித்து, ஹீரோவாகவும் நடித்தார். 55 கோடி செலவில் உருவான இந்த படம் பயங்கர பிளாப் ஆனது.

Also Read: தி லெஜண்ட் படம் நிகழ்த்திய 5 சாதனை.. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அண்ணாச்சி

அண்ணாச்சி சரவணா, விட்ட காசை பிடித்து விடலாம் என OTT தளத்தின் வியாபாரத்தை நம்பி இருந்தார். ஆனால் அந்த வியாபாரமும் அவரை காலை வாரி விட்டது. கோடிக்கணக்கில் உருவான படத்தை லட்சக் கணக்கிலேயே வியாபாரம் பேசி முடித்தனர்.

மேலும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் தான் கிடைத்தது. அண்ணாச்சி இந்த படத்தில் விழுந்த அடியில் இருந்தே இன்னும் எழுந்திரிக்கவில்லை என்று சொல்லலாம். அதற்குள் அவரை தேடி கதை சொல்ல ஆரம்பித்து விட்டனர் இயக்குனர்கள்.

Also Read: 5 மொழி, 50 கோடி செலவு செய்த அண்ணாச்சி.. ‘தி லெஜன்ட்’ தாக்கு பிடிப்பாரா.? திரைவிமர்சனம்

ஆனால் அண்ணாச்சி இப்போதைக்கு படம் எடுக்கும் முடிவில் இல்லை போல. கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் எல்லாம் இப்போதைக்கு எந்த படமும் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்றும் சொல்லிவிடுகிறாராம்.

அண்ணாச்சி ஏற்கனவே அவருடைய சொந்த தொழில் வந்த லாபத்தை வைத்து தான் லெஜெண்ட் படத்தை தயாரித்து நடித்தார். அந்த படம் அட்டர் பிளாப் ஆகிவிட்டது. எனவே இனி அவருடைய தொழில் வரும் லாபத்தை வைத்தே அடுத்த படத்தை திட்டமிடுவார் என்று தெரிகிறது.

Also Read: 2,500 தியேட்டர்களில் வெளியான ‘தி லெஜண்ட்’ அண்ணாச்சி ஜெயித்தாரா.? அனலை கக்கும் ட்விட்டர் விமர்சனம்

Trending News