புதன்கிழமை, ஜனவரி 8, 2025

டி ஆர் ரூட்டை ஃபாலோ பண்ணும் அண்ணாச்சி.. இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியில் படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்ட டி ஆர் ராஜேந்தருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்போது அவர் திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும் இவர் இயக்கி, நடித்த அந்தக் கால திரைப்படங்களை இப்போதும் ரசிகர்கள் டிவியில் போட்டால் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு பிரபலமாக இருக்கும் டி ராஜேந்தர் சில விஷயங்களில் ரொம்பவும் கெடுபிடியான மனிதர். அதாவது இப்போது ஓ டி டி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. அத்தகைய நிறுவனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற பழைய திரைப்படங்களையும் கைப்பற்றி ஒளிபரப்பி வருகிறது.

Also read: கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத டி ராஜேந்தர்.. பின்னால் இருக்கும் பலே காரணம்

ஆனால் டி ராஜேந்தர் மட்டும் தன்னுடைய படங்களை இது போன்ற ஓடிடி தளங்களுக்கு கொடுக்க மறுத்து விடுகிறார். ஏனென்றால் அவர் நீண்ட காலங்களுக்கு பிறகும் தன்னுடைய படங்களை தியேட்டரில் போட்டு சம்பாதித்தார். அப்படி இருக்கும்போது ஓ டி டி தளங்களுக்கு படங்களை விற்று விட்டால் தியேட்டரில் ஓடாது என்பதே அவருடைய எண்ணம்.

தற்போது இவருடைய ரூட்டை தான் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியும் பின்பற்றி வருகிறாராம். அவருடைய நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி லெஜெண்ட் திரைப்படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வெளியாகி இருந்தது. கோடிக்கணக்கில் காசை வாரி இறைத்து ஹீரோவாக நடித்த அண்ணாச்சிக்கு அந்த திரைப்படம் தோல்வியை தான் கொடுத்தது.

Also read: அண்ணாச்சியை விட மோசமாக கலாய்க்கப்பட்ட ரஜினி.. திரும்பி கூட பார்க்காத இளைய தலைமுறை

தியேட்டரில் தான் லாபம் இல்லை ஓடிடியிலாவது காசு பார்க்கலாம் என்று நினைத்த அண்ணாச்சிக்கு அங்கும் ஏமாற்றம்தான் கிடைத்தது. ஏனென்றால் மிகவும் குறைந்த விலைக்கு தான் அந்த படத்தை பலரும் கேட்டனர். அதனாலேயே இந்த படத்தை இப்போது வரை யாரும் வாங்கவில்லை. அப்படியும் அவரை தேடி வந்த சில நிறுவனங்களையும் இவர் முடியாது என்று திருப்பி அனுப்பி இருக்கிறார்.

நீண்ட காலங்களுக்கு பிறகு டி ஆர் படங்களை தியேட்டரில் வெளியிட்டால் அதற்கு ஒரு வரவேற்பு இருக்கும். ஆனால் அதே போன்ற வரவேற்பு அண்ணாச்சி படங்களுக்கும் இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் அது கேள்விக்குறிதான். அந்த வகையில் கிடைக்கிற விலைக்கு படத்தை தள்ளி விடாமல் இப்படி அவர் பிடிவாதம் பிடிப்பது நியாயமே இல்லை என்று பலரும் கலாய்த்து வருகின்றனர். மேலும் அண்ணாச்சி தற்போது இரண்டு மூன்று கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறார். விரைவில் அவருடைய அடுத்த பட அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Also read: அடுத்தடுத்து தோல்வி படங்கள்.. லெஜெண்ட் அண்ணாச்சியை வளைத்துப் போட நினைக்கும் சுந்தர்.சி

Trending News