Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தம்பிக்காக முத்து ஒரு டிராமா போட்டதால் கல்லூரி முதல்வர், சத்தியா எக்ஸாம் எழுதுவதற்கு சம்மதம் கொடுத்து விட்டார். ஆனால் முத்து உண்மையிலேயே குடித்துவிட்டு மீனாவை கொடுமைப்படுத்துகிறார் என்று தவறாக புரிந்து போலீஸ் இடம் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். அதன்படி அந்த இடத்திற்கு வந்த போலீஸ், முத்துவை அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டார்கள்.
இதனால் எப்படியாவது முத்துவை வெளியே கொண்டு வர வேண்டும் என்று மீனா முயற்சி செய்கிறார். அந்த வகையில் மீனாவுக்கு தெரிந்தது சுருதி மட்டும் என்பதால் சுருதிக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி உதவி கேட்கிறார். அப்பொழுது சுருதி அவருடைய அம்மாவுக்கு போன் பண்ணி முத்துவை ஜாமினில் எடுக்க சொல்கிறார்.
மச்சானுக்கு ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைக்க முத்து
ஆனால் ஸ்ருதியின் அம்மா அப்பாவுக்கு, முத்துவின் மீது கோபம் இருப்பதால் உதவி செய்ய மறுப்பு தெரிவித்து விட்டார்கள். அதோடு விடாமல் இந்த விஷயத்தை முத்து குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லி பிரச்சினையை பெரிசாக வேண்டும் என்று ஸ்ருதி அம்மா விஜயாவை பார்த்து பேச வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் உங்க பிள்ளை குடித்துவிட்டு ரகளை பண்ணினால் அதற்கு நாங்கள் ஏன் உதவி பண்ண வேண்டும் என்று அவமானப்படுத்திவிட்டு பேசி போகிறார்.
இது இதுவும் தெரியாத மீனா, சுருதி உதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு சுருதி, மீனாவுக்கு போன் பண்ணி என்னால் எந்த உதவியும் பண்ண முடியாத நிலைமையில் இருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். இதனால் முத்து நீ எதுவும் கவலைப்படாதே நான் காலையில் வந்து கொள்கிறேன் நீ வீட்டுக்கு போ என்று அனுப்பி வைக்கிறார்.
வீட்டுக்கு மீனா வந்தவுடன் விஜயா முத்து எங்கே என்று கேட்கிறார். மீனா சவாரி இருக்கு என்று பொய் சொல்லிய நிலையில் விஜயா நடந்த விஷயத்தை சொல்லி மீனாவை திட்டுகிறார். இதையெல்லாம் பார்த்த ரோகினி மற்றும் மனோஜ் இதுதான் சான்ஸ் என்று முத்துவை அசிங்கப்படுத்தி பேசுகிறார். அப்பொழுது மீனா அவர் ஒன்னும் நிஜமாவே குடிக்கவில்லை என் தம்பிக்காக நாங்கள் பண்ணுன ஒரு டிராமாவில் மாட்டிக்கொண்டார் என்று நடந்து உண்மையை சொல்கிறார்.
இதை கேட்டு அண்ணாமலை, இது எவ்வளவு பெரிய தப்பு உங்க இஷ்டத்துக்கு எல்லாம் முடிவு எடுத்துக் கொள்கிறீர்கள். முத்து தான் எதையும் யோசிக்காமல் மற்றவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவான் என்றால் நீயும் அதே மாதிரியே இருக்கிறாய். இப்ப பாரு தேவையில்லாமல் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார். எதுனாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் சொல்லி செய்ய மாட்டீர்களா என்று விஜயா உடன் சேர்ந்து கொண்டு அண்ணாமலை, மீனாவை திட்டுகிறார்.
இதை பார்த்த விஜயா எப்பொழுதும் உனக்காக சப்போர்ட் பண்ணி பேசும் உன் மாமனாரே நீ செய்த காரியத்துக்கு கோபப்பட்டு பேசி போறார். நீ எல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டாய் என்று சொல்லி மீனாவை திட்டிவிட்டு விஜயாவும் போய்விடுகிறார். கடைசியில் இதெல்லாம் நினைத்து குற்ற உணர்ச்சியில் மீனா அழுது கொண்டிருக்கிறார்.
பிறகு காலையில் மீனா போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். அங்கே சத்யா மற்றும் சீதா காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு மூன்று பேரும் சேர்ந்து போலீஸிடம் நடந்து உண்மையை சொல்லி முத்துவை வெளியே கொண்டு வந்து விடுகிறார்கள். போலீசும் ஒரு வார்னிங் கொடுத்து இந்த மாதிரி விஷயத்தை மறுபடியும் பண்ண கூடாது என்று எச்சரிக்கை கொடுத்து முத்துவை வெளியே விட்டு விடுகிறார்கள்.
வெளியே வந்த முத்துவை பார்த்ததும் மீனாவின் தம்பி சத்யா மன்னிப்பு கேட்டு இரண்டு பேரும் ஒற்றுமையாகி கைகோர்த்து விடுகிறார்கள். இவர்களின் ஒற்றுமையை பார்த்ததும் சீதா மற்றும் மீனா ஆனந்த கண்ணீர் வடித்து அனைவரும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு போகிறார்கள். அந்த வகையில் இனி இவர்களுக்கு எந்த பிரச்சனையும் கொடுக்காதபடி ரோகிணி எதுவும் பண்ண முடியாது.
ஆனால் அடுத்தபடியாக முத்து எப்படி இந்த ஒரு விஷயத்தில் சாதித்துக் காட்டினாரோ, அதே மாதிரி ரோகிணி பற்றி விஷயங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடித்து குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி உண்மையை போட்டு உடைக்க வேண்டும்.