வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரகசியமாக கைலாசா சென்று வரும் மற்றொரு நடிகை.. ரஞ்சிதாவை தொடர்ந்து நித்திக்கு கிடைத்த பொக்கிஷம்

ஒரு காலத்தில் பக்தர்களால் கொண்டாடப்பட்ட சுவாமி நித்யானந்தா அவரின் உண்மை முகம் வெளிவந்ததால் இன்று பலரின் வெறுப்புக்கும் ஆளாகி இருக்கிறார். குழந்தை கடத்தல், பண மோசடி உள்ளிட்ட பல குற்றங்கள் இவர் மேல் சுமத்தப்பட்டு வழக்கும் பதியப்பட்டது. இது ஒரு புறம் இருக்க நித்தியானந்தா கைலாசா என்ற ஒரு தீவை உருவாக்கி அங்கு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நித்தியானந்தா உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருவதாக பல செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தது.

Also read : மரணப்படுக்கையில் நித்யானந்தா.. ஆயிரக்கணக்கான கோடிகளை ஆட்டையப் போட்ட அமுக்குணி ரஞ்சிதா

தற்போது அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறதாம். நாளுக்கு நாள் அவருடைய நிலை மோசமாகி கொண்டே வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய பக்தர்கள் பலரும் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகை கௌசல்யா நித்தியானந்தாவை பார்ப்பதற்காக கைலாசாவுக்கு ரகசியமாக சென்று வருகிறாராம். தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த இவர் பல வருடங்களாக முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அந்தப் பிரச்சினையை நித்தியானந்தா தான் சரி செய்தாராம்.

Also read : உலக கோடீஸ்வரர்களை மிரள விட்ட 5 பணக்கார சாமியார்கள்.. முதல் இடத்தைப் பிடித்த கைலாசநாதர்

அப்போதிலிருந்தே அவர் நித்தியானந்தாவின் தீவிர பக்தையாக மாறிப் போயிருக்கிறார். இது குறித்து பல வருடங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தது. கௌசல்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் இதுதான் காரணம் என்று கூட சொல்லப்பட்டது. தற்போது அதை நிரூபிக்கும் வகையில் அவர் ரகசியமாக கைலாசாவிற்கு சென்று வந்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவுடன் படு நெருக்கமாக இருந்தது பரபரப்பை கிளப்பியது. இப்போது கூட நித்தியானந்தாவிற்கு அடுத்தபடியாக ரஞ்சிதா தான் அனைத்து பொறுப்பையும் கவனித்து வருகிறார். இந்நிலையில் நித்தியானந்தாவின் மற்றொரு தீவிர பக்தை கௌசல்யாவும் கைலாசா தீவே கதி என கிடப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read : எலும்பும் தோலுமாக மாறிய நித்யானந்தா.. நோய் தாக்கியதால் 27 மருத்துவர்களுடன் சிகிச்சை

Trending News