யோகி பாபு இப்பொழுது பாலிவுட்டிலும் ரொம்ப ஃபேமஸ். இரண்டு வருடங்களாக விஜய் டிவியில் சந்தானம் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய லொள்ளு சபா நிகழ்ச்சியின் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்தார். அதன்பின் தன்னுடைய அசத்தலான கவுண்டர் காமெடிகளால் இப்பொழுது சினிமாவில் வடிவேலு இடத்தை பிடித்து அசத்தி வருகிறார்.
பாலிவுட் கிங் காங் நடிகரான ஷாருக்கானுக்கு யோகி பாபு என்றால் ரொம்ப பிரியமாம். அவருடைய ஜவான் படத்தில் இவர் நடித்திருந்தார். இவர் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு உள்ளார் ஷாருக்கான். அட்லியிடம் தன் விருப்பத்தை கூறி ஜவான் படத்திலும் நடிக்க வைத்தார்.
ஷாருக்கான் மற்றும் யோகி பாபு இருவருக்கும் இப்பொழுது நல்ல ஒரு நட்பு இருந்து வருகிறது. காமெடிக்கு எப்படி யோகி பாபு ஷாருக்காணை கவர்ந்தாரோ, அதேபோல் வில்லத்தனமான நடிப்பிற்கு இப்பொழுது தமிழ் நடிகர் ஒருவர் தான் வேண்டும் என அடம் பிடித்து வருகிறார் இந்த கிங்காங்.
கிங்காங்கிற்கு குட் பை போட்ட ஜாக்கி
இப்பொழுது ஹிந்தியில் “தி கிங்” என்ற ஒரு படத்தில் ஷாருக்கான் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு எஸ் ஜே சூர்யா தான் வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு உள்ளார். மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே சூர்யா நேற்று நடித்த ஜாக்கி பாண்டியன் கதாபாத்திரம், ஷருக்கானை வெகுவாக கவர்ந்துவிட்டதாம்.
ஆனால் ஷாருக்கானின் “தி கிங்” படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். தொடர்ந்து 45 நாட்கள் அவர் நடிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். இப்பொழுது எஸ்.ஜே சூர்யா இருக்கும் படு பயங்கர பிசியில் அவரால் ஒரே படத்திற்கு இவ்வளவு நாட்கள் கால் சீட் கொடுக்க முடியாதாம். எஸ்.ஜே சூர்யா தற்சமயம் ஆறு படங்களில் நடித்து வருகிறாராம்.
- முன்னணி இயக்குனர்கள் ஆனாலும் நோ சொல்லும் யோகி
- யோகி பாபு இடத்தை பிடித்த விஜய்யின் செல்லபிள்ளை
- ஒரே நாளில் 3 படங்களில் நடித்து கல்லாக்கட்டும் 5 நடிகர்கள்