Ajith: அஜித் நடிப்பில் பிசியாக இருந்தாலும் தன் குடும்பத்துடன் நேரம் செலவழித்தும் வருகிறார். அப்படி வெளியாகும் இவர்களுடைய குடும்ப போட்டோக்களை ரசிகர்கள் பயர் விட்டு கொண்டாடுவார்கள்.
அதேபோல் ஷாலினி பொது இடங்களுக்கு செல்லும் போட்டோக்களும் வைரலாகும். அதில் தற்போது அவர் தன் மகள் அனோஷ்காவுடன் ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்த போட்டோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது. அதை காண்பதற்கு நெல்சன், கவின் உட்பட பல பிரபலங்கள் வந்திருந்தனர்.
ஷாலினியுடன் அனோஷ்கா
அதேபோல் அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகளுடன் வந்திருந்தார். அதில் அனோஷ்கா கூலிங் கிளாஸ், மாடர்ன் டிரஸ் என படு ஸ்டைலாக வந்திருந்தார்.
சமீபகாலமாக இவருடைய போட்டோக்கள் அதிக அளவில் வெளியாகி வருகிறது. அது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய போட்டோவும் ஏகப்பட்ட லைக்குகளை பெற்று வருகிறது.